Tuesday, 24 November 2026

NMMS - கணினி காட்சித் தொடர்பு

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

அறிவியல்.

ஏழாம் வகுப்பு.

கணினி காட்சித் தொடர்பு.

கணினி கோப்பு File.

கணினி கோப்புத் தொகுப்பு Folder.

அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் இயக்க மென்பொருள்கள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ்.

விண்டோஸில் குறிப்புகளைச் சேமிக்க Notepad, படம் வரைய Paint பயன்படுகிறது.

புகைப்படங்களை அழகு செய்ய, மாறுதல் செய்ய Photoshop பயன்படுகிறது.

மைக்ரோசாப்ட் Photo Story காணொளி தயாரிக்கப் பயன்படுகிறது.

கணிதத்தின் அடிப்படையில் வெக்டர் படங்கள் உருவாக்கப்படுகின்றன.

படப்புள்ளிகளை Pixels அடிப்படையாகக் கொண்டு ராஸ்டர் வகைப் படங்கள் உருவாக்கப்படுகின்றன.

நிழற்படக் கருவி Camera மூலம் எடுக்கப்படும் படங்களும், வருடி Scanner மூலம் பெறப்படும் படங்களும் ராஸ்டர் வகையைச் சேர்ந்தவை.

ராஸ்டர் வரைகலைப் படங்களை Edit செய்யும் மென்பொருள் Adobe Photoshop.

வெக்டர் வகைப் படங்களில் துல்லியத்தன்மை மாறாது. அளவிலும் குறைந்தது. PDF இவ்வகையிலானது.

வெக்டர் வரைகலைப் படங்களை Edit செய்ய Adobe Illustrator, Sketch, Inkscape பயன்படுகின்றன.

இரு பரிமாண படங்கள் நீளம் மற்றும் அகலம் ஆகிய இரு பரிமாணங்களைக் கொண்டிருக்கும்.

முப்பரிமாண படங்கள் நீளம், அகலம், உயரம் ஆகிய முப்பரிமாணங்களைக் கொண்டிருக்கும்.

முப்பரிமாணத்தின் அடுத்த கட்டமாக மெய்நிகர் Vitrual Reality தொழில் நுட்பம் வந்துள்ளது.

கணினியால் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவங்கள் போலக் காட்டுபவை மெய்நிகர் தோற்றங்கள் ஆகும்.

மெய்நிகர் தோற்றம் மூலம் விளையாடப்படும் விளையாட்டுகள் மைதானத்தில் விளையாடுவது போலத் தோன்றும்.

திறன்பேசிகளில் (Smart Phones) மெய்நிகர் செயலிகள் வந்து விட்டன.

முக்கிய வினாக்கள்

SVG என்பதன் விரிவாக்கம் என்ன?

            1) Scalable Vector Graph.                   2) Scalable Vector Graphics.

            3) Scan Vector Graphics.                    4) Scan Vector Graph.

விடை : Scalable Vector Graphics.

GIF என்பதன் விரிவாக்கம் என்ன?

            1) Graphics Inner Format.                  2) Graph Interchange Format.           

            3) Graphics Interchange Format.        4) Graphics Interchange Formation.

விடை : Graphics Interchange Format.

தொடர்பற்றதைத் தேர்ந்தெடுக்க.

            1) .gif.                                                  2) .doc.

            3) .png.                                                            4) .jpeg.

விடை : .doc.

Tagged Image File Format என்பதன் சுருக்கம் யாது?

            1) .tif.                                                   2) .tff.

            3) .tfif.                                                  4) .tiff.

விடை : .tiff.

*****

No comments:

Post a Comment