தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.
National Means Cum Merit Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன் (SAT).
அறிவியல்.
ஏழாம் வகுப்பு.
உடல் நலமும் சுகாதாரமும்.
உடல் நலம் என்பது நோய்கள், பிற பிரச்சனைகள் இல்லாத நல்ல
மனநிலை மற்றும் உடல்நிலையைக் குறிக்கும்.
சமூக சுகாதாரம் என்பது வடிகால்கள் சரியாக மூடப்பட்டு இருத்தல்,
கழிவு நீரைத் திறந்த வெளியில் வெளியேற்றாமை, குப்பைகளைப் பிரித்து பாதுகாப்பாக அகற்றுதல்
ஆகியவற்றைக் குறிக்கும்.
டெங்கு காய்ச்சல் பிளேவி வைரஸைச் சேர்ந்த DEN 1, 2 வைரசால்
ஏற்படுகிறது. ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்களால் பரவுகிறது.
டெங்கு காய்ச்சல் ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
செரிமான மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், தசை மண்டலம் ஆகியன
நன்கு செயல்பட வேண்டிய முக்கிய மண்டலங்கள் ஆகும்.
மெல்லும் மற்றும் ருசிக்கும் செயல் மாஸ்டிகேசன் ஆகும்.
பற்களை ஃப்ளோசிங் செய்யும் போது உணவுத்துகள், பற்காரை மற்றும்
பாக்டீரியங்கள் நீக்கப்படும்.
வைட்டமின் சி குறைவினால் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது.
இக்குறைபாட்டைப் போக்க சிட்ரஸ் பழங்களை உண்ண வேண்டும்.
புகையிலை மெல்லுதலால் புறத்திசு நோய் ஏற்படுகிறது.
வைட்டமின் ஏ குறைவால் மாலைக்கண் நோய் ஏற்படுகிறது.
இளம் சிவப்புக் கண் நோய் (விழிவெண்படல அழற்சி) அதாவது மெட்ராஸ்
ஐ நோய் வைரஸ், பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
வண்ணக் குருட்டுத்தன்மை மரபணு நிலையால் ஏற்படுகிறது.
காசநோய், காலரா, டைபாய்டு போன்றவை பாக்டீரியா நோய்கள் ஆகும்.
மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே காசநோயை ஏற்படுத்துகிறது. காசநோய்க்கான தடுப்பூசி
BCG.
விப்ரியோ காலரே பாக்டீரியாவால் காலரா ஏற்படுகிறது.
சால்மொனெல்லா டைபி பாக்டீரியாவினால் டைபாய்டு ஏற்படுகிறது.
ஹெபாடிட்டிஸ் வைரஸால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
வாரிசெல்லா ஜோஸ்டர் வைரஸால் தட்டமை ஏற்படுகிறது.
ரெப்டோ வைரஸால் ரேபிஸ் (வெறிநாய்க்கடி) ஏற்படுகிறது. நீரைக்
கண்டு பயப்படும் ஹைட்ரோபோபியா இந்நோயினால் ஏற்படுகிறது.
தோலில் நிறமி இழப்புகளால் ஏற்படும் நோய் லூகோடெர்மா.
மண் சாப்பிடும் குழந்தைகள், பெண்களுக்கு ரத்தசோகை இருக்கும்.
முதல்நிலை தீக்காயங்கள் வெளிப்புறத் தோல் அடுக்கினைப் பாதிக்கின்றன.
இரண்டாம் நிலை தீக்காயங்கள் உட்புறத் தோலின் டெர்மிஸைப்
பாதிக்கின்றன.
மூன்றாம் நிலை தீக்காயங்கள் திசுவைச் சிதைக்கிறது.
பெனிசிலின் மருந்துகளின் ராணி என அழைக்கப்படுகிறது.
உலகில் முதலில் கண்டறியப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்து
பெனிசிலின்.
அலெக்சாண்டர் பிளமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்.
நிமோனியா, டிப்தீரியா நோய்களைப் பெனிசிலின் குணப்படுத்துகிறது.
NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினா
ஈறுகளில் ரத்தக் கசிவுக்குத் தீர்வு காண எதை உண்ண வேண்டும்?
1) ஆப்பிள். 2)
மாம்பழம்.
3) பலாப்பழம். 4) சிட்ரஸ் பழங்கள்.
விடை
: சிட்ரஸ் பழங்கள்.
முக்கிய வினாக்கள்
வெக்டார்கள் என்பது கீழ்கண்டவற்றுள் எவை?
1) நீர். 2) காற்று.
3) பூச்சிகள். 4) உணவு.
விடை
: பூச்சிகள்.
குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்குப் பதிலாக வேறு உணவுகளைக் கொடுப்பதால் உருவாகும்
நோய் எது?
1) வயிற்றுப்போக்கு. 2) இரத்த சோகை.
3) சீரோப்தால்மியா. 4) இருமல்.
விடை
: இரத்தசோகை.
அனோரெக்லியா என்பது எந்த உணர்வைக் குறிக்கிறது?
1) தாகம். 2) பசி.
3) கோபம். 4) பசியின்மை.
விடை
: பசியின்மை.
தட்டம்மை நோய் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1) தொற்றா
நோய். 2) ரேபிஸ்.
3) ஊட்டச்சத்தின்மை. 4) வாரிசெல்லா.
விடை
: வாரிசெல்லா.
*****
No comments:
Post a Comment