தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.
National Means Cum Merit Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன் (SAT).
அறிவியல்.
ஏழாம் வகுப்பு.
காட்சித் தொடர்பியல்.
Libre Office இல் உள்ள பயன்பாடுகளாவன, 1. Text
Document உரை ஆவணம், 2, Spreadsheet அட்டவணைச் செயலி, 3. Impress நிகழ்த்துதல், 4.
Draw படங்கள் வரைதல், 5. Data base தரவுத்தளம்.
Text Document உரை ஆவணம் என்பது Word செயலியாகும். இதில்
ஒரு புதிய ஆவணத்தை உருவாக்க File, New, Text Document கட்டளைகளைப் பயன்படுத்த வேண்டும்.
Key Board இல் CTRL + N ஐப் பயன்படுத்தியும் இச்செயலைச் செய்யலாம்.
ஆவணத்தைத் திறக்க File, Open கட்டளைகளைப் பயன்படுத்த வேண்டும்.
Key Board இல் CTRL + O ஐப் பயன்படுத்தியும் இச்செயலைச் செய்யலாம்.
ஆவணத்தைத் சேமிக்க File, Save கட்டளைகளைப் பயன்படுத்த வேண்டும்.
Key Board இல் CTRL + S ஐப் பயன்படுத்தியும் இச்செயலைச் செய்யலாம்.
ஆவணத்தின் பெயரை மாற்ற File, Save as கட்டளைகளைப் பயன்படுத்த
வேண்டும்.
ஆவணத்தை மூட File, Close கட்டளைகளைப் பயன்படுத்த வேண்டும்.
ஆவணத்தை அச்சிட File, Print கட்டளைகளைப் பயன்படுத்த வேண்டும்.
Key Board இல் CTRL + P ஐப் பயன்படுத்தியும் இச்செயலைச் செய்யலாம்.
அச்சு முன்னோட்டம் காண File, Print Preview கட்டளைகளைப்
பயன்படுத்த வேண்டும். Key Board இல் CTRL + Shift + O ஐப் பயன்படுத்தியும் இச்செயலைச்
செய்யலாம்.
Text Document லிருந்து வெளியேற File, Exit
Libreoffice கட்டளைகளைப் பயன்படுத்த வேண்டும்.
உரையைத் தேர்ந்தெடுக்க சுட்டி (Mouse) அல்லது விசைப்பலகையைப்
(Key Board) பயன்படுத்தலாம்.
உரையை வெட்ட Edit, Cut கட்டளைகளை அல்லது விசைப்பலகையில்
CTRL + X ஐப் பயன்படுத்தலாம்.
உரையை ஒட்ட Edit, Paste கட்டளைகளை அல்லது விசைப்பலகையில்
CTRL + V ஐப் பயன்படுத்தலாம்.
உரையை நகலெடுக்க Edit, Copy கட்டளைகளை அல்லது விசைப்பலகையில்
CTRL + C ஐப் பயன்படுத்தலாம்.
வடிவூட்டம் Format என்பதைத் தேர்வு செய்வதன் மூலம் உரையைத்
தடிப்பாக்க (Bold), சாய்வாக்க (Italic), அடிக்கோடிட (Underline) செய்யலாம். அல்லது
மேற்கண்ட பணிகளை விசைப்பலகையின் மூலமாகச் செய்ய CTRL + B, CTRL + I, CTRL + U பயன்படுத்தலாம்.
எழுத்துருக்களை Font மாற்ற கருவிப்பட்டையில் Toolbar உள்ள
Font என்பதைப் பயன்படுத்தலாம். Font Size மூலம் எழுத்துரு அளவை மாற்றலாம். Font
Colour மூலம் எழுத்துருவின் நிறத்தை மாற்றலாம்.
பத்தி ஒழுங்குபடுத்தல் Paragraph Alignment மூலம் வலது
ஒருங்கமைப்பு Right Alignment , இடது ஒருங்கமைப்பு Left Alignment, நடு ஒருங்கமைப்பு
Centre Alighment, ஒரு சேர ஒருங்கமைப்பு Justify செய்யலாம்.
பக்கத்தின் அமைவு Page Orientation மூலமாக இரு வகையான Portrait, Landscape பக்க அமைவுகளைச் செய்யலாம்.
இதற்கு Format, Page, Paper Format, Orientation கட்டளைகளைப் பயன்படுத்த வேண்டும்.
Ruler மூலமாகப் பக்க ஓரங்களை மாற்றி அமைக்க முடியும். இதற்கு
View, Ruler கட்டளைகளைப் பயன்படுத்த வேண்டும். Margin Guide மூலமாக புதிய இடத்துக்கு
நகர்த்தலாம்.
முக்கிய வினாக்கள்
கடிதங்கள், அறிக்கைகள் உருவாக்கப் பயன்படும் செயலி எது?
1) உரை
ஆவணம். 2) அட்டவணைச் செயலி.
3) நிகழ்த்துதல். 4) படங்கள் வரைதல்.
விடை
: உரை ஆவணம்.
வரைபடங்கள் உருவாக்கப் பயன்படும் செயலி எது?
1) உரை
ஆவணம். 2) அட்டவணைச் செயலி.
3) நிகழ்த்துதல். 4) படங்கள் வரைதல்.
விடை
: அட்டவணைச் செயலி.
ஓர் ஆவணத்தைப் புதிய ஆவணமாகச் சேமிக்கப் பயன்படும் கட்டளை எது?
1)
Save. 2)
Save as.
3)
Redo. 4)
Undo.
விடை
: Save as.
Libre Office Writer இல் எத்தனை வகையான பக்க அமைவுகள் உள்ளன?
1)
4. 2) 3.
3)
2. 4) 1.
விடை
: 2.
*****
No comments:
Post a Comment