Wednesday, 25 November 2026

NMMS - வகைப்பாட்டியலின் அடிப்படைகள்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

அறிவியல்.

ஏழாம் வகுப்பு.

வகைப்பாட்டியலின் அடிப்படைகள்.

இதுவரை 8.7 மில்லியன் உயிரினங்கள் கண்டறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன.

உயிரினங்களை ஒற்றுமை, வேற்றுமை அடிப்படையில் வகைப்படுத்துதல் இரு பகுதிகளாகப் பகுத்தல் திறவுகோல் எனப்படுகிறது.

விலங்கியலின் தந்தை அரிஸ்டாட்டில். இவர் உயிரினங்களைத் தாவரங்கள், விலங்குகள் எனப் பகுத்தார்.

உயிரினங்களைச் சரியாக இனம் கண்டறிய வகைப்பாட்டியல் பயன்படுகிறது.

உயிரினங்களின் படிநிலை முறையை அறிமுகப்படுத்தியவர் லின்னேயஸ்.

உலகம், தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம், பேரினம், சிற்றினம் என உயிரினங்களின் வகைப்பாட்டியல் படிநிலைகளைக் கொண்டுள்ளது.

மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிரேட்ஸ்.

தாவரவியலின் தந்தை தியோப்ராஸ்டஸ்.

வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு சிற்றினம். இச்சொல்லை அறிமுகப்படுத்தியவர் ஜான்ரே.

ஆயுர்வேதத்தின் தந்தை  சரகர்.

வகைப்பாட்டியல் என்ற சொல்லைப் பயன்படுத்தியவர் அகஸ்டின் – பாரமஸ்டே கண்டோல்.

உயிரினங்களை முதலில் வகைப்படுத்தியவர் ஸ்வீடனைச் சேர்ந்த கரோலஸ் லின்னேயஸ்.

சிஸ்டமேடிக்ஸ் என்ற சொல்லை முதலில் சிஸ்டமா நேச்சுரே என்ற நூலில் பயன்படுத்தியவர்  லின்னேயஸ்.

விலங்குகள் முதுகெலும்பற்றவை, முதுகெலும்புள்ளவை என வகைப்படுத்தப்படுகின்றன.

புரோட்டோசோவா, துளையுடலிகள், குழியுடலிகள், தட்டைப் புழுக்கள், உருளைப் புழுக்கள், வளைதசைப் புழுக்கள், கணுக்காலிகள், மெல்லுடலிகள், முட்தோலிகள் ஆகியன முதுகெலும்பற்றவை.

மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் ஆகியன முதுகெலும்புள்ளவை.

அமீபா, யூக்ளினா, பாரமீசியம் போன்றன புரோட்டோசோவா.

லியூக்கோசொலினியா, ஸ்பான்ஜில்லா, சைகான் ஆகியன துளையுடலிகள் (பொரிபெரா).

ஹைட்ரா, ஜெல்லி மீன், கடல் சாமந்தி, பவளங்கள் ஆகியன குழியுடலிகள் (சீலென்டிரேட்டா). இவற்றில் நெமட்டோசிஸ்டுகள் எனும் கொட்டும் செல்கள் உள்ளன.

பிளானேரியா, கல்லீரல் புழு, இரத்தப் புழு, நாடாப்புழு போன்றன தட்டைப் புழுக்கள் (பிளாட்டிஹெல்மின்தஸ்). இவை ஒட்டுண்ணிகளாக மனித உடலில் வாழும் இருபால் உயிரிகளாகும்.

அஸ்காரிஸ் லும்பிரிக்காய்ட்ஸ் உருளைப்புழு (நெமடோடா) ஆகும். இது போலி உடற்குழி உடையது.

மண்புழு, நீரிஸ், அட்டை போன்றவை வளைத்தசைப்புழுக்கள் (அனலிடா). இவை ஒத்த உடற்கண்டம் கொண்ட மெட்டாமெரிசம் உடையவை.

நண்டு, இறால், மரவட்டை, பூச்சிகள், தேள், சிலந்தி போன்றன கணுக்காலிகள் (ஆர்த்ரோபோடா). இவற்றின் உடலில் கைட்டினால் ஆன புறச்சட்டகம் உள்ளது.

கணவாய் மீன்கள், நத்தை, ஆக்டோபஸ் போன்றன மெல்லுடலிகள் (மொலாஸ்கா). இவற்றில் மான்டில் என்ற ஓடு உள்ளது.

நட்சத்திர மீன், கடல் வெள்ளரி, கடல் அல்லி போன்றன முட்தோலிகள் (எக்கைனோடெர்மேட்டா).

நுண்ணோக்கி மூலம் காண இயலும் ஒரு செல் விலங்கு பாரமீசியம்.

பைலேரியஸ் புழுக்கள் யானைக்காலை ஏற்படுத்துகின்றன.

உயிரினங்களின் மிகப்பெரிய தொகுதி கணுக்காலிகள். விலங்குலகின் இரண்டாவது பெரிய தொகுதி மெல்லுடலிகள்.

மீன்கள் (பிஸ்ஸல்) நீரில் வாழ்பவை. செவுள்களால் சுவாசிப்பவை. இதயம் இரு அறைகளைக் கொண்டவை.

தவளை, தேரை, சாலமண்டர், சிசிலியன் ஆகியன இருவாழ்விகள் (ஆம்பீபியன்ஸ்). இவற்றின் இதயம் மூன்று அறைகளால் ஆனது. குளிர் உறக்கம், கோடை உறக்கம் கொண்டவை.

ஊர்வன (ரெப்டைல்ஸ்) குளிர் ரத்தப் பிராணிகள் ஆகும். இதயம் மூன்று அறைகள் கொண்டவை. எனினும் முதலையின் இதயம் நான்கு அறைகள் கொண்டது.

பறவைகள் (ஏவ்ஸ்) வெப்ப ரத்தப் பிராணிகள் ஆகும். இதயம் நான்கு அறைகளைக் கொண்டவை. காற்றறை நிரம்பிய எலும்புகள் நிமாட்டிக் போன்ஸ் பெற்றவை.

பாலூட்டிகள் (மாமெலியா) நிலத்தில் வாழும் வெப்ப ரத்த பிராணிகள். இதயம் நான்கு அறைகளைக் கொண்டவை.

தாவரங்கள் விதைகளை உருவாக்காதவை, விதைகளை உருவாக்குபவை என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.

பாசிகள் மற்றும் பூஞ்சைகள் (தாலோபைட்டா), மாஸ்கள் (பிரையோபைட்டா), பெரணிகள் (டெரிடோபைட்டா) ஆகியன விதைகளை உருவாக்காதவை.

திறந்த விதைத் தாவரங்கள் (ஜிம்னோஸ்பெர்ம்கள்), மூடிய விதைத் தாவரங்கள் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) என விதைகளை உருவாக்கும்  தாவரங்கள் இரு வகைப்படுகின்றன.

மூடிய விதைத்தாவரங்கள் ஒரு வித்திலைத் தாவரங்கள், இரு வித்திலைத் தாவரங்கள் என இரு வகைப்படுகின்றன.

பிரையோபைட்டுகள் தாவர உலகின் இரு வாழ்விகள் எனப்படுகின்றன. இவை வாழ்க்கை சுழற்சியை நிறைவு செய்ய நீர் அவசியம்.

நிலத்தில் தோன்றிய முதல் நிலத் தாவரங்கள் டெரிடோபைட்டுகள். இவை ஈரப்பதம் நிறைந்த குளிர்ச்சியான பகுதியில் வாழ்பவை.

சைகஸ், பைனஸ், நீட்டம் போன்றவை ஜிம்னோஸ்பெர்ம்கள். இவை கனிகளை உருவாக்குவதில்லை.

ஆஞ்சியோஸ்பெர்ம்கள் புல்லி வட்டம், அல்லி வட்டம், மகரந்த வட்டம், சூலக வட்டம் என்ற நான்கு அடுக்குகளைக் கொண்ட மலர்களை உருவாக்குகின்றன. இவை மேம்பாடு அடைந்த தாவரங்கள் ஆகும்.

இராபர்ட் ஹார்டிங் விட்டேக்கர் பரிணாமத் தொடர்பின் அடிப்படையில் ஐந்துலக வகைப்பாட்டை 1969 இல் அறிமுகப்படுத்தினார்.

பாக்டீரியங்கள், நீலப் பசும் பாசிகள் போன்றன மொனிரா ஒரு செல் புரோகேரியாட்டிக் ஆகும்.

பாசிகள், அமீபா, பாரமீசியம் போன்றன புரோடிஸ்டா ஒரு செல் யூகேரியாட்டிக் ஆகும்.

பூஞ்சைகள், தாவரங்கள், விலங்குகள் போன்றன ஒரு செல் அல்லது பல செல் யூகேரியாட்டிக் ஆகும்.

 

 

வைரஸ்களுக்கு ஐந்துலக வகைப்பாட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

ஐந்துலக வகைப்பாட்டில் புரோட்டிஸ்டாவின் கீழ் வரும் உயிரினங்கள் யூகேரியாட்டிக் பண்பைக் கொண்டவை அல்ல.

இரு சொல் பெயரிடும் முறையை 1623 இல் அறிமுகப்படுத்தியவர் காஸ்பார்டு பாகின்.

இரு சொல் பெயரிடும் முறையை 1753 இல் ஸ்பீசிஸ் பிளாண்டாரம் நூலில் செயல்படுத்தியவர் கரோலஸ் லின்னேயஸ்.

நவீன வகைப்பாட்டியலின் தந்தை கரோலஸ் லின்னேயஸ்.

இரு சொல் பெயரிடும் முறையில் முதல் பெயர் பேரினத்தையும் இரண்டாம் பெயர் சிற்றினத்தையும் குறிக்கும்.

வெங்காயத்தின் இரு சொல் பெயர் அல்லியம் சீபா.

மாமரத்தின் இரு சொல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.

மனிதனின் இரு சொல் பெயர் ஹோமோ சேப்பியன்ஸ்.

புறாவின் இரு சொல் பெயர் கொலம்பா லிவியா.

கரப்பான் பூச்சியின் அறிவியல் பெயர் பெரிப்ளனேட்டா அமெரிக்கானா.

உலகளாவிய பல்வகைத் தன்மையில் இந்தியா பத்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.

மனித உடலில் சராசரியாக ஒரு கிலோ பாக்டீரியங்கள் உள்ளன.

யூக்ளினா தாவர மற்றும் விலங்குகளுக்கு இடையே எல்லைக் கோட்டில் உள்ளது.

நெருப்புக்கோழி, கிவி, பெங்குயின் போன்றவை பறக்க இயலாத பறவைகள்.

முட்டையிடும் பாலூட்டிகள் எகிட்னா, பிளாட்டிபஸ்.

திமிங்கலங்களும் டால்பின்களும் பாலூட்டிகள்.

உலகில் மிகப் பெரிய இருவாழ்வி ஆன்டிரியஸ் டாவிடியன்ஸ்.

NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை வகைப்படுத்தியவர் யார்?

            1) பிளம்மிங்.                                                            2) வார்மிங்.

            3) டார்வின்.                                                 4) மெண்டல்.

விடை : வார்மிங்.

சரியான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

            1) தவளை                 – மஸ்கா டொமஸ்டிகா.   

            2) புறா                       – ரானா ஹெக்ஸாடாக்டைலா.

            3) கரப்பான் பூச்சி    – பெரிபிளானேட்டா அமெரிக்கானா.                          

            4) மனிதன்                 – கொலம்பா லிவியா.

விடை : கரப்பான் பூச்சி – பெரிபிளானேட்டா அமெரிக்கானா.

பொருந்தாத இணைகளைக் கண்டறியவும்.

            1) மெல்லுடலிகள்             – கடினமான உடல் மற்றும் ஓடு இல்லாதவை.

            2) கணுக்காலிகள்                - இணைப்பு இல்லா கால்கள்.

            3) தட்டைப் புழுக்கள்        - சுடர் செல்கள்.

            4) வளைதசைப் புழுக்கள்  - கண்டங்களால் ஆன உடல்.

விடை : 1 மற்றும் 2.

தேங்காயின் தாவரவியல் பெயர் என்ன?

            1) அல்லியம் சட்டைவம்.                         2) ஒரைசா சட்டைவா.

            3) காக்கஸ் நியூசிபெரா.                             4) சிட்ரஸ் சென்ன்ஸிஸ்.

விடை : காக்கஸ் நியூசிபெரா.

முக்கிய வினாக்கள்

உயிரி வகைப்பாட்டில் மிகப் பெரிய பிரிவு எது?

            1) வரிசை.                                                      2) உலகம்.

            3) தொகுதி.                                                   4) குடும்பம்.

விடை : உலகம்.

விலங்குலகத்தில் மனிதன் எந்தப் பிரிவில் வைக்கப்படுகிறான்?

            1) ஊர்வன.                                                    2) இரு வாழ்விகள்.

            3) பாலூட்டிகள்.                                          4) நடப்பன.

விடை : பாலூட்டிகள்.

டாக்ஸானில் அடங்கியுள்ளவை எவை?

            1) பேரினம், சிற்றினம்.                  

            2) உலகம், பிரிவு.

            3) படிநிலையில் உள்ள அனைத்தும்.     

            4) மேற்கண்ட எதுவுமில்லை.

விடை : படிநிலையில் உள்ள அனைத்தும்.

உலகின் பெரிய மற்றும் அதிக எடை கொண்ட பாலூட்டி எது?

            1) நீலத்திமிங்கலம்.                                                2) யானை.

            3) சிங்கம்.                                                      4) புலி.

விடை : நீலத்திமிங்கலம்.

*****

No comments:

Post a Comment