தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.
National Means Cum Merit Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன் (SAT).
அறிவியல்.
ஏழாம் வகுப்பு.
பலபடி வேதியியல்.
பல ஒற்றைப்படிகள் சகப்பிணைப்புகளால் நீண்ட சங்கிலித் தொடராக
உருவாகும் அமைப்பே பலபடி ஆகும். பலபடியை உருவாக்கும் முறை பலபடியாக்கல் எனப்படும்.
PVC என்பது பாலி வினைல் குளோரைடு.
ஒற்றைப்படிகள் இணைந்துள்ள முறைகள் பண்புகள் அடிப்படையில்
இழைகள், நெகிழிகள், புரதங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.
பலபடிகள் இயற்கை, செயற்கை பலபடி எனவும் வகைப்படுத்தப்படுகிறது.
புரதம், கார்போஹைட்ரேட், செல்லுலோஸ் ஆகியன இயற்கை பலபடிகள்.
அமினோ அமிலங்கள் என்ற 20 வகையான ஒற்றைப்படிகளால் ஆனவை புரதங்கள்.
DNA, நொதிகள், பட்டு, தோல், முடி, விரல் நகங்கள், இறகுகள்
போன்றன புரதங்களின் பலபடிகள்.
செல்லுலோஸ், கைட்டின், லிக்னின் என்பன கார்போஹைட்ரேட்டின்
பலபடிகள்.
நண்டுகள் மற்றும் சிலந்திகளின் புற எலும்பு கூடுகளில்,
பூஞ்சைகளின் செல்சுவர்களில் காணப்படுவது கைட்டின்.
தாவரங்களுக்குக் கட்டமைப்பு கொடுப்பதில் முக்கியமானது லிக்னின்.
எத்திலீன், புரோபைலீன் போன்றன ஒற்றைப்படிகள். இவை பெட்ரோலியத்தைப்
பின்ன காய்ச்சி வடிக்கும் போது கிடைப்பவை.
நெகிழிகளை உருவாக்கும் கட்டமைப்புப் பொருளாக எத்திலீன்,
புரோபைலீன் விளங்குகின்றன.
பருத்தி, தேங்காய் நார், முடி, கம்பளி போன்றன இயற்கை இழைகள்.
மல்பெரி, டஸ்ஸர், முகா, எரி என்பன இயற்கை பட்டின் 4 வகைகள்
ஆகும்.
பட்டு உற்பத்தியில் இந்தியா உலக அளவில் இரண்டாமிடம் வகிக்கிறது.
மல்பெரி வலிமையான இயற்கை இழையாகும். இது உடைகள், தரைவிரிப்பு,
பாராசூட் தயாரிக்க பயன்படுகிறது.
1946 இல் கேரளாவில் முதல் ரேயான் தொழிற்சாலை நிறுவப்பட்டது.
ரேயான் என்பது செயற்கை பட்டு ஆகும்.
மரக்கூழுடன் சோடியம் ஹைட்ராக்சைடு, கார்பன் டை சல்பைடு
சேர்க்கும் போது செல்லுலோஸ் கரைந்து கிடைக்கும் விஸ்கோஸ் திரவத்தை ஸ்பின்னரெட்டின்
வழியே நீர்த்த கந்தக அமிலத்தில் செலுத்த செயற்கைப் பட்டு கிடைக்கிறது. இது சோப்பினால்
சுத்தம் செய்யப்படுகிறது.
ரேயான் மற்றும் பருத்தி சேர்த்து போர்வையும் ரேயான் மற்றும்
கம்பளி சேர்த்து விரிப்பான்களும் தயாரிக்கப்படுகின்றன.
பாலியெஸ்டர், அக்ரிலிக், நைலான் போன்றவை செயற்கை இழைகள்
ஆகும்.
முதன் முதலில் முழுமையாகப் பதப்படுத்தப்பட்ட செயற்கை இழை
நைலான் ஆகும்.
ஹெக்ஸா மெத்திலீன் டை அமீன் மற்றும் அடிபிக் அமிலம் இணைந்து
உருவான பாலி அமைடு நைலான் ஆகும்.
நைலான் இரண்டாம் உலகப் போரின் போது பாராசூட், கயிறு தயாரிக்கப்
பயன்பட்டது.
செயற்கை இழைகளுள் அதிகம் பயன்படுவது நைலான் ஆகும்.
இரும்புக் கம்பியைக் காட்டிலும் நைலான் இழை வலிமையானது.
பாலியெஸ்டர் என்பது பல எஸ்டர் ஒற்றைப் பலபடி இணைந்தது ஆகும்.
பாலிகாட், பாலிவுல், டெரிகாட் எனும் பெயர்களால் பாலியெஸ்டர்
விற்பனை செய்யப்படுகிறது.
பாலிகாட் என்பது பாலியெஸ்டர் பருத்தியின் கலவை.
பாலிவுல் என்பது பாலியெஸ்டர் கம்பளியின் கலவை.
PET என்பது பாலி எத்திலீன் டெரிப்தாலேட் என்பதாகும். நீர்,
சோடா பாட்டில் கலன்கள் தயாரிக்க இது பயன்படுகிறது.
அக்ரிலிக் என்பது நெகிழி தயாரிப்பின் போது கிடைக்கும் துணைப்பொருள்.
இது விலை மலிவான செயற்கை இழை.
பாலி புரொப்பிலீன் அதிக வலிமையும் நீட்சித் தன்மையும் உடையதால்
குதிப்பதைத் தாங்கும் டிராம்போலைன் தயாரிப்பில் பயன்படுகிறது.
செயற்கை இழைகள் வெப்பத்தைத் தாங்கும் திறனற்றவை. எளிதில்
தீப்பற்றக் கூடியவை. நீர், நில மாசுபாட்டை உருவாக்குபவை.
நோய்த்தொற்று நீக்கம் செய்ய தேவைப்படாத உறிஞ்சுக்குழாய்
பாலி புரோபைலீன் நெகிழியினால் செய்யப்படுகிறது.
2019 ஜனவரி 1 முதல் 40 மில்லி மைக்ரானுக்குக் குறைவான ஒரு
முறை பயன்படுத்தும் நெகிழிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களின்
எண்ணிக்கை 14.
பாலி எத்திலீன் (பாலித்தீன்), PET (பாலி எத்திலீன் டெரிப்தாலேட்)
ஆகியன இளகும் நெகிழி ஆகும். இவற்றை உருக்கி மறுசுழற்சி செய்து வேறொரு நெகிழிப் பொருளாக்கலாம்.
பேக்கலைட், மெலமைன் என்பன இறுகும் நெகிழியாகும். இவற்றை
உருக்கி வேறொரு பொருளாக மாற்ற இயலாது.
மின் ஸ்விட்சுகள், பாத்திரங்களின் கைப்பிடிகள் தயாரிக்க
பேக்கலைட் பயன்படுகிறது.
தீயினைத் தாங்கும் திறன் பெற்றிருப்பதால் மெலமைன் தரை ஓடுகள்,
தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்தும் ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
பாலிஸ்டைரின் என்ற நெகிழி புற்றுநோயை ஏற்படுத்தும் ஸ்டைரின்
என்ற நஞ்சான வேதிப்பொருளைக் கொண்டுள்ளது.
பாலி வினைல் குளோரைடு (PVC) காட்மியம், ஈயம் போன்ற தீங்கு
செய்யும் உலோகங்களைக் கொண்டுள்ளது.
2015 இல் நடந்த ஆய்வு 90 சதவீதம் கடல்வாழ் பறவைகளின் வயிற்றில்
நெகிழிகள் இருப்பதைக் காட்டியது.
பி.எல்.ஏ. பாலி லாக்டிக் அமிலம் என்பது மட்கும் தன்மை கொண்ட
நெகிழி ஆகும்.
நெகிழிக் கழிவுகளில் 79 சதவீதம் திறந்த வெளியில் கொட்டப்படும்
குப்பை மேடாகிறது. 12 சதவீதம் எரிக்கப்படுகிறது. 9 சதவீதம் மட்டும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.
Refuse, Reduce, Reuse, Recycle, Recover என்பன நெகிழியை
அகற்றுவதற்கான வழிகள் ஆகும்.
உலக அளவில் 7 – 13 சதவீத நெகிழிகள் குழிகளில் இட்டு புதைக்கப்படுகிறது.
உயிரி நெகிழி என்ற கருத்து தோன்றிய ஆண்டு 1980.
நெகிழியைச் செரிக்கும் பாக்டீரியா ஐடெனல்லா சகீயன்சிஸ்
201-F6. இது 2016 இல் ஜப்பான் அறிவியலாளர்களால்
கண்டறியப்பட்டது. இது ரெசின் குறியீடு #1 எண்ணுக்குரிய நெகிழியினை மட்டும் சிதைக்கும்.
1700 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்தி சிலிகான் டை
ஆக்ஸைடை உருக்கி சோடியம் கார்பனேட் சேர்த்து வேகமாகக் குளிர்வித்து கண்ணாடி தயாரிக்கப்படுகிறது.
வர்த்தக அளவில் கண்ணாடி தயாரிக்க மணலினை வீணாகிப் போன கண்ணாடியுடன்
சோடா சாம்பல் (சோடியம் கார்பனேட்) சுண்ணாம்புக் கல் (கால்சியம் கார்பனேட்) ஆகியவற்றை
உலையில் இட்டு வெப்பப்படுத்தப்படுகிறது.
நாம் பயன்படுத்தும் சாதாரண கண்ணாடி சோடாலைம் சிலிக்கா கண்ணாடி
ஆகும்.
பச்சை நிறக் கண்ணாடிகள் தயாரிக்க இரும்பு, குரோமியம் சேர்க்கப்படுகிறது.
பைரக்ஸ் கண்ணாடி தயாரிக்க போரான் ஆக்சைடு சேர்க்கப்படுகிறது.
படிக நிலையில் உள்ள வெட்டக்கூடிய கண்ணாடிகள் தயாரிக்க ஈய
ஆக்சைடு சேர்க்கப்படுகிறது.
குண்டு துளைக்காத கண்ணாடி தயாரிக்க நெகிழி சேர்க்கப்படுகிறது.
ஒளிக் கவச கண்ணாடி தயாரிக்க வெள்ளி அயோடைடு சேர்க்கப்படுகிறது.
நெகிழி 200 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ளது.
பார்க்கிசீன் எனும் முதல் நெகிழியினை உருவாக்கியவர் எட்மண்ட்
அலெக்சாண்டர் பார்க்ஸ்.
ஆண்டுதோறும் ஒரு டிரில்லியன் அதாவது ஒரு நிமிடத்திற்கு
இரு மில்லியன் என்ற அளவில் நெகிழிப்பைகளைப் பயன்படுத்துகிறோம்.
உணவுச் சங்கிலி தொடரில் நாம் உண்ணும் உணவு, பருகும் நீர்,
சுவாசிக்கும் காற்றில் நெகிழி நுண் இழைகள் காணப்படுகின்றன.
நெகிழிப் பொருட்களின் வகையினைக் குறிக்க ரெசின் குறியீடு
பயன்படுத்தப்படுகிறது.
ரெசின் குறியீடு #1 PET. இதன் வேறு பெயர் PETE பாலியெஸ்டர்.
இவ்வகை நெகிழியை ஒரு முறை மட்டும் பயன்படுத்த வேண்டும். மீண்டும் பயன்படுத்தினால் ஆண்டிமணி
எனும் வேதிப்பொருள் வெளியேறும்.
ரெசின் குறியீடு #2 HDPE. இதன் வேறு பெயர் PEHD. இது பாதுகாப்பான
நெகிழியாகக் கருதப்படுகிறது.
ரெசின் குறியீடு #3 PVC. இதன் வேறு பெயர் V-Vinyl. இது
மிகவும் ஆபத்தான நெகிழிப் பொருளாகும்.
ரெசின் குறியீடு #4 LDPE. இதன் வேறுபெயர் PELD, LLDPE.
இது பாதுகாப்பான நெகிழியாகும்.
ரெசின் குறியீடு #5 PP. இது ஒரு முறை மட்டும் பயன்படுத்தும்
பாதுகாப்பான நெகிழியாகும்.
ரெசின் குறியீடு #6 PS. இதன் வேறுபெயர்கள் Thermocol,
EPS, XPS, HIPS. இவை ஆபத்தான வேதிப்பொருட்களைக் கொண்டவை.
ரெசின் குறியீடு #7 HDPE. இதன் வேறுபெயர் பாலி கார்பனேட்
PC, அக்ரிலோ நைட்ரில் ப்யூட்டாடையீன் ஸ்டைரீன் ABS, அக்ரிலிக் AC, பாலியூரித்தேன் பீயூ.
NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
மட்கிப் போகும் தன்மை உடைய பிளாஸ்டிக் பொருளின் வணிகப் பெயர் என்ன?
1) பாலி
ஹைட்ராக்சி பியூட்டீரேட். 2) ஆல்காலிஜன்ஸ்.
3) பாலிவினைல்
குளோரைடு. 4) நெகிழி.
விடை
: பாலி ஹைட்ராக்சி பியூட்டீரேட்.
நெகிழி உண்ணும் பாக்டீரியா எது?
1) அசிட்டோபாக்டர். 2) நைட்ரோசோமோனாஸ்.
3) ஐடெனல்லா
சகீயன்சிஸ். 4) சால்மோனெல்லா.
விடை
: ஐடெனல்லா சகீயன்சிஸ்.
ரேயான் தயாரிப்பில் வேதிப்பொருள்களில் செல்லுலோஸ் கரைந்து உருவாகும் திரவத்தின்
பெயர் என்ன?
1) மால்டோஸ். 2) சுக்ரோஸ்.
3) குளுக்கோஸ். 4) விஸ்கோஸ்.
விடை
: விஸ்கோஸ்.
ரெசின் குறியீடு அடிப்படையில் நெகிழி எத்தனை வகைப்படும்?
1)
6. 2) 7.
3)
9. 4) 5.
விடை
: 7.
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க.
1) டி.என்.ஏ. 2) லிக்னின்.
3) கைட்டின். 4) செல்லுலோஸ்.
விடை
: டி.என்.ஏ.
செயற்கை பட்டு என அழைக்கப்படுவது எது?
1) மல்பெரி. 2) டஸ்ஸர்.
3) ரேயான். 4) நைலான்.
விடை
: ரேயான்.
*****
No comments:
Post a Comment