தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.
National Means Cum Merit Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன் (SAT).
அறிவியல்.
ஏழாம் வகுப்பு.
செல் உயிரியல்.
உயிரிகளின் அமைப்பு, செயல் அலகு செல்.
செல்லுலா என்ற லத்தீன் சொல்லுக்கு சிறிய அறை அல்லது சிறிய
பெட்டி என்பது பொருள்.
புரோகேரியாட்டிக் செல், யூகேரியாட்டிக் செல் என்று செல்
இரு வகைப்படும்.
தெளிவான உட்கரு இல்லாத பாக்டீரியா, சயனோ பாக்டீரியா போன்றவை
புரோகேரியாட்டிக் செல்.
தெளிவான உட்கரு கொண்ட தாவர செல், விலங்கு செல் போன்றவை
யூகேரியாட்டிக் செல்.
செல்லைக் கண்டுபிடித்தவர் இராபர்ட் ஹூக்.
செல் என்ற சொல்லை இவரே மைக்ரோகிராபியா நூலில் பயன்படுத்தியவர்.
ஜேன்சன் கூட்டு நுண்ணோக்கியைக் கண்டறிந்தார்.
செல்லைப் பற்றிய அறிவியல் பிரிவு செல்லியல் (சைட்டாலஜி).
செல்லின் அளவு ஒரு மைக்ரோ மீட்டரிலிருந்து சில சென்டி மீட்டர்
வரை அமையும்.
கண்களால் பார்க்கும் அளவுள்ள செல் கோழி முட்டை.
பாக்டீரியாக்கள் 0.1 மைக்ரோ மீட்டரிலிருந்து 0.5 மைக்ரோ
மீட்டர் வரை இருக்கும்.
நெருப்புக் கோழியின் முட்டை 170 மில்லி மீட்டர் விட்டம்
கொண்டது.
மனித உடலில் நீளமான செல் நரம்பு செல்.
புவியில் முதலில் உருவான செல் புரோகேரியாட்டிக் செல்.
மனித உடலில் உள்ள செல்களின் தோராய எண்ணிக்கை 3.7 பெருக்கல்
10 இன் அடுக்கு13.
பாக்டீரியா, அமீபா, கிளாமிடோமோனஸ், ஈஸ்ட் போன்றவை ஒரு செல்
உயிரினங்கள்.
ஸ்பைரோகைரா, மாமரம், மனிதன் பல செல் உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டு.
புரோகேரியாட்டிக் செல்லின் உட்கரு நியூக்ளியாய்டு எனப்படுகிறது.
இவற்றின் ரைபோசோம் 70S வகை.
யூகேரியாட்டுகளின் ரைபோசோம் 80S வகை.
தாவர செல்லில் செல்சுவர், பசுங்கணிகங்கள் உண்டு. சென்ட்ரியோல்கள்
இல்லை. ஸ்டார்ச் சேமிப்புப் பொருள்.
விலங்கு செல்லில் செல்சவ்வு உண்டு. பசுங்கணிகங்கள் இல்லை.
சென்ட்ரியோல்கள் உண்டு.கிளைக்கோஜன் சேமிப்புப் பொருள்.
செல் முட்டை போன்ற முப்பரிமாண வடிவம் உடையது.
செல்கள் சேர்ந்து திசு, திசுக்கள் சேர்ந்து உறுப்பு, உறுப்புகள்
சேர்ந்து உறுப்பு மண்டலம், உறுப்பு மண்டலங்கள் சேர்ந்து உயிரினங்கள் உருவாகின்றன.
உட்கருவில் உள்ள திரவம் நியூக்ளியோபிளாசம்.
உட்கருவுக்கு வெளியே காணப்படுவது சைட்டோபிளாசம்.
உட்கருவும் சைட்டோபிளாசமும் சேர்ந்தது புரோட்டோபிளாசம்.
செல்சுவர் செல்லுலோசால் ஆனது. இதுவே தாவர செல்லிற்கு வடிவத்தைத்
தருகிறது.
புரோட்டோ என்றால் முதன்மை என்றும் பிளாசம் என்றால் கூழ்
என்றும் பொருள்.
புரோட்டோபிளாசத்தைக் கண்டறிந்தவர் கார்டி. பெயரிட்டவர்
பர்கின்ஜி.
செல்சவ்விற்குள் காணப்படும் கூழ் போன்ற திரவம் சைட்டோபிளாசம்.
இது உட்கருவைத் தவிர செல்லின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளது.
செல்லின் ஆற்றல் மையம் மைட்டோ காண்ட்ரியா. இதைக் கண்டுபிடித்தவர்
கோலிக்கர். இதற்கு பையோபிளாஸ்ட் எனப் பெயரிட்டவர் ஆல்ட்மேன். மைட்டோகாண்ட்ரியா எனப்
பெயரிட்டவர் பெண்டா. இதன் உட்சவ்வு கிரிஸ்டே.
மைட்டோ காண்ட்ரியா செல்சுவாசத்தின் போது அடினோசின் டிரை
பாஸ்பேட்டை (ATP) உருவாக்குகிறது.
கோல்கை உறுப்பு செல்லின் போக்குவரத்துக் காவலர் எனப்படுகிறது.
கோல்கை உறுப்பை முதலில் விவரித்தவர் கேமில்லோ கால்ஜி.
தாவர செல்லில் டிக்டியோசோம்கள் என்றும் விலங்கு செல்லில்
கோல்கை உறுப்புகள் என்றும் அழைக்கப்படுகிறது.
உணவைச் செரிமானம் செய்வது, செரிமான நொதிகளைச் சுரப்பது,
லைசோசோம்களைச் சுரப்பது கோல்கை உறுப்புகளின் பணி.
எண்டோபிளாச வலை எனப் பெயரிட்டவர் போர்ட்டர்.
ரைபோசோம் ஒட்டிக் காணப்படுவது சொரசொரப்பான எண்டோபிளாச வலை.
இது புரத உற்பத்தியில் பங்கு வகிக்கிறது.
ரைபோசோம் இல்லாதவை வழுவழுப்பான எண்டோபிளாச வலை. இது ஸ்டீராய்டுகள்,
ஹார்மோன்கள், லிப்பிடுகள் உற்பத்தியில் பங்கு வகிக்கிறது.
ரைபோசோம் செல்லின் புரதத் தொழிற்சாலை எனப்படுகிறது.
ரைபோசோம் ரிபோ நியூக்ளிக் அமிலம் மற்றும் புரதங்களால் ஆனது.
ரைபோசோம் ஸ்வெட்பெர்க் என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது.
லைசோசோம் செல்லின் துப்புரவாளர் அல்லது தற்கொலைப் பைகள்
எனப்படுகிறது. இதைக் கண்டறிந்தவர் கிரிஸ்டியன் டி டுவி.
சென்ட்ரியோல் எனப் பெயரிட்டவர் டி போ வேரி. இது விலங்கு
செல்லில் மட்டும் காணப்படுகிறது. செல் பிரிதலில் குரோமோசோம்களைப் பிரிக்க உதவுகிறது.
வாக்வோல்கள் தாவர செல்லில் அதிகம் காணப்படுகிறது. செல்லின்
உள் அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது.
கணிகங்கள் தாவரங்களின் உணவு உற்பத்தியாளர் அல்லது செல்லின்
உணவுத் தொழிற்சாலை எனப்படுகிறது.
வெளிர் கணிகங்கள், வண்ணக் கணிகங்கள், பசுங்கணிகங்கள் என
கணிகங்கள் மூவகைப்படும்.
வெளிர் கணிகங்கள் (லியுகோ பிளாஸ்டுகள்) நிறமற்றவை. இவை
தாவரத்தின் வேர்ப்பகுதி, தரைகீழ் தண்டுகளில் காணப்படும். இவை உணவைச் சேமித்து வைக்கின்றன.
வண்ணக் கணிகங்கள் (குரோமோ பிளாஸ்ட்டுகள்) மலர்கள், கனிகளுக்கு
நிறத்தை அளிக்கின்றன.
கரோட்டின் ஆரஞ்சு நிறமி. சாந்தோபில் மஞ்சள் நிறமி.
பசுங்கணிகங்கள் (குளோரோபிளாஸ்டுகள்) குளோரோபில் எனும் பச்சை
நிறமியைக் கொண்டுள்ளன.
பசுங்கணிகங்களில் காணப்படும் நாணய அடுக்கு அமைப்பு கிரானாக்கள்.
கிரானா தைலக்காய்டுகளைப் பெற்றுள்ளன. தைலக்காய்டு இல்லாத பகுதி ஸ்ட்ரோமா.
காய் கனியாகும் போது பசுங்கணிகம் வண்ணக்கணிகமாகும். ஸ்டார்ச்
சர்க்கரையாகும்.
பசுங்கணிகம் சூரிய ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றுகிறது.
குரோமோசோம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் வால்டேயர்.
குரோமோசோம் ஜீன்களைக் கொண்டுள்ளது.
செல்லின் மிகப்பெரிய நுண்ணுறுப்பு உட்கரு. இது செல்லின்
கட்டுப்பாட்டு மையம் .
இரத்த சிவப்பு செல்லில் உட்கரு இல்லை.
மூலச்செல் ஸ்டெம் செல் எனப்படுகின்றன.
எபிதீலியல் செல் உடல் மேற்பரப்பை மூடி பாதுகாக்கிறது.
இரத்தம் சிவப்புச் செல்களால் ஆனது என்பதைக் கண்டறிந்தவர்
அன்டன் வான் லூவன்காக்.
விலங்கு செல்லின் கடினமான செல் எலும்பு செல்.
தாவர செல்களின் மிகப்பெரிய செல் சைகசின் சூல்.
செல்லியலின் மிகச் சிறிய அலகு ஆங்க்ஸ்ட்ராம்.
ஸ்லைடன், ஸ்வான் ஆகியோர் செல் கொள்கையை வெளியிட்டனர்.
செல் சவ்வு இல்லாத ஒரே நுண்ணுறுப்பு ரைபோசோம்.
குரோமோசோம் படத்தொகுப்பைப் படம் வரைந்து காட்டுவது இடியோகிராம்.
டி.என்.ஏ.வை அளக்கும் அலகு பிக்கோகிராம். டி.என்.ஏ. என்பதன்
விரிவாக்கம் டீ ஆக்சிரிபோ நியூக்ளிக் ஆசிட்.
ஆர்.என்.ஏ. என்பதன் விரிவாக்கம் ரிபோ நியூக்ளிக் ஆசிட்.
மனித செல்களில் மிகப் பெரியது அண்ட செல். மிகச் சிறியது
விந்து செல்.
NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
செல்லின் ஆற்றல் மையம் எது?
1) பசுங்கணிகம். 2) மைட்ரோ காண்ட்ரியா.
3) ரைபோசோம். 4) எண்டோபிளாச வலை.
விடை
: மைட்ரோ காண்ட்ரியா.
ஒவ்வொரு செல்லும் அதன் அருகில் உள்ள செல்களுடன் இணைத்துக் கொள்ளும் துவாரம்
எது?
1) சைக்ளோ
டெஸ்மாட்டா. 2) பிளாஸ்மோ டெஸ்மாட்டா.
3) நியூக்ளியோ
டெஸ்மாட்டா. 4) புரோட்டோ டெஸ்மாட்டா.
விடை
: பிளாஸ்மோ டெஸ்மாட்டா.
செல் பிரிதலின் போது கதிர் இழை நார்களை, ஆஸ்ட்ரல் உறுப்புகளை உருவாக்குவது
எது?
1) மைட்டோ
காண்ட்ரியா. 2) சென்ட்ரியோல்.
3) லைசோசோம். 4) ரிபோசோம்.
விடை
: சென்ட்ரியோல்.
உட்கருவின் உள்ளே உள்ள திரவம், வெளியே உள்ள திரவம் எது?
1) சைட்டோபிளாசம்,
புரோட்டோபிளாசம்.
2) பசுங்கணிகம்,
புரோட்டோபிளாஸ்ட்.
3) நியூக்ளியோபிளாசம்,
சைட்டோபிளாசம்.
4) ஜெர்ம்ப்ளாசம்,
எண்டோபிளாசம்.
விடை
: நியூக்ளியோபிளாசம், சைட்டோபிளாசம்.
முக்கிய வினாக்கள்
கீழ்கண்டவற்றுள் எது ஒரு செல் உயிரினம் அல்ல?
1) ஈஸ்ட். 2) அமீபா.
3) ஸ்பைரோகைரா. 4) பாக்டீரியா.
விடை
: ஸ்பைரோகைரா.
பசுங்கணிகத்தில் பச்சையம் காணப்படும் இடம் எது?
1) தைலக்காய்டுகள். 2)
வெளிச்சவ்வு.
3) உள்சவ்வு. 4) ஸ்ட்ரோமா.
விடை
: தைலக்காய்டுகள்.
தாவர செல் சுவர்களில் அதிகம் காணப்படுவது எது?
1) லிக்னின். 2) ஹெமி செல்லுலோஸ்.
3) ஸ்டார்ச். 4) செல்லுலோஸ்.
விடை
: செல்லுலோஸ்.
இரண்டு சவ்வுகளால் சூழப்படாத செல் உறுப்பு எது?
1) மைட்டோ
காண்ட்ரியா. 2) பசுங்கணிகம்.
3) லைசோசோம். 4) நியூக்ளியஸ்.
விடை
: லைசோசோம்.
*****
No comments:
Post a Comment