தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.
National Means Cum Merit Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன் (SAT).
அறிவியல்.
எட்டாம் வகுப்பு.
11. காற்று.
காற்றில் ஆக்சிஜன் 20.95 சதவீதமும், நைட்ரஜன் 78.09 சதவீதமும்,
கார்பன் டை ஆக்சைடு 0.04 சதவீதமும், ஆர்கான் 0.93 சதவீதமும் உள்ளது.
வளிமண்டலத்தில் அடிவளி, அடுக்குவளி, இடைவளி, அயனி மண்டலம்,
புறவளி மண்டலம் என ஐந்து அடுக்குகள் உள்ளன.
ஆக்சிஜனைக் கண்டறிந்தோர் கார்ல் வில்கம் ஷீலே மற்றும் ஜோசப்
ப்ரீஸ்ட்லீ.
கிரேக்க மொழியில் ஆக்சிஜன்ஸ் என்றால் அமில உருவாக்கி என்று
பொருள்.
ஆக்சிஜனுக்குப் பெயரிட்டவர் லவாய்சியர். ஆக்சிஜனுக்கு நெருப்புக்
காற்று, அத்தியாவசியமான உயிர் என்ற வேறு பெயர்களும் வழங்கப்பட்டன.
ஹைட்ரஜன், ஹீலியத்திற்கு அடுத்தப்படியாக அண்டத்தில் அதிகம்
காணப்படும் தனிமம் ஆக்சிஜன்.
வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஆக்சிஜன் ஓசோன் எனப்படும் மூவணு
மூலக்கூறாக உள்ளது.
ஆக்சிஜன் அதிக அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலைக்கு
உட்படுத்தும் போது திரவமாகிறது.
ஆக்சிஜன் நைட்ரஜனை விட இரு மடங்கு நீரில் கரையும்.
ஆக்சிஜன் பாஸ்பரசுடன் வினைபுரிந்து மூச்சடைக்கும் நெடியுடன்
கூடிய பாஸ்பரஸ் பென்டாக்ஸைடு உருவாகிறது.
ஆக்சிஜன் உலோகங்களுடன் வினை புரிந்து உலோக ஆக்சைடு உருவாகிறது.
ஆக்சிஜன் அலோகங்களுடன் வினை புரிந்து அலோக ஆக்சைடு உருவாகிறது.
ஆக்சிஜன் ஹைட்ரோ கார்பன்களுடன் வினை புரிந்து கார்பன் டை
ஆக்சைடும், நீராவியும் உருவாகிறது.
துரு என்பது நீரேறிய இரும்பு II ஆக்சைடு ஆகும்.
உயிரினங்கள் சுவாசிக்க ஆக்சிஜன் பயன்படுகிறது. செயற்கை
சுவாசத்திலும் ஆக்சிஜன் பயன்படுகிறது.
ஆக்சி அசிட்டிலின் கலவை வெல்டிங்கில் பயன்படுகிறது.
எஃகிலுள்ள மாசை அகற்றவும் ராக்கெட் எரிபொருளாகவும் ஆக்சிஜன்
பயன்படுகிறது.
மெத்தனால், அமோனியா தயாரிக்கவும் உயிரினங்கள் சுவாசிக்கவும்
ஆக்சிஜன் பயன்படுகிறது.
கார்ல் வில்கம் ஷீலே என்பவர் காற்றிலிருந்து நைட்ரஜனைப்
பிரித்தெடுத்தார்.
லவாய்சியர் நைட்ரஜனுக்கு அசோட் எனப் பெயரிட்டார். அசோட்
என்றால் வாழ்வு இல்லாதது என்பது பொருளாகும்.
நைட்டர் என்பது பொட்டாசியம் நைட்ரேட்டைக் குறிக்கும்.
சிலி சால்ட் பீட்டர் என்பது சோடியம் நைட்ரேட் ஆகும்.
புரதத்தில் காணப்படும் தனிமம் நைட்ரஜன். இது உயிரினங்களின்
வளர்ச்சிக்கு உதவுகிறது.
பாக்டீரியங்கள் நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்துகின்றன.
உலோகங்களுடன் நைட்ரஜன் வினை புரிந்து உலோக நைட்ரேட் உருவாகிறது.
அலோகங்களுடன் நைட்ரஜன் வினை புரிந்து நைட்ரஜன் சேர்மங்களைத்
தருகிறது.
நைட்ரஜன் குளிர்சாதனப் பெட்டிகளில் குளிர்விப்பானாக, ஹேபர்
முறையில் அமோனியா தயாரிக்க, வாகனங்களின் டயர்களில் நிரப்ப, வெடிபொருள் தயாரிக்க பயன்படுகிறது.
காற்றேற்றப்பட்ட குளிர்பானங்கள் தயாரிக்க, உலர் பனிக்கட்டி
குளிரூட்டியாக, தீ அணைப்பானாக, யூரியா தயாரிக்க, உணவைப் பதப்படுத்த, சால்வே முறையில்
சோடியம் பை கார்பனேட் தயாரிக்க கார்பன் டை ஆக்சைடு பயன்படுகிறது.
கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, மீத்தேன், குளோரோ
புளூரோ கார்பன் ஆகியன பசுமை இல்ல வாயுக்கள் எனப்படுகின்றன.
பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகமாகும் போது புவி வெப்பமடைதல்
அதிகமாகிறது.
உலக வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுதல், பவளப்பாறைகள்
அழிதல், இயற்கைப் பேரிடர், தொற்றுநோய்ப் பரவல் போன்றவை ஏற்படுகின்றன.
மழை நீரின் pH மதிப்பு 5.6.
நைட்ரஜன் மற்றும் சல்பரின் ஆக்சைடுகள் மழை நீரில் கரைந்து
அமிலமாக உருவெடுத்து அமில மழை பொழிகிறது.
அமில மழையால் விதை முளைத்தல் மற்றும் வளர்ச்சியில் தடை
ஏற்படுகிறது. மண் வளம் பாதிக்கப்படுகிறது. கண், தோலில் எரிச்சல் ஏற்படுகிறது.
NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
உலர் பனிக்கட்டி என்பது எது?
1) திட
நிலையில் உள்ள ஆக்சிஜன்.
2) திட
நிலையில் உள்ள கார்பன் டை ஆக்சைடு.
3) திட
நிலையில் உள்ள நைட்ரஜன்.
4) திட
நிலையில் உள்ள ஹைட்ரஜன்.
விடை
: திட நிலையில் உள்ள கார்பன் டை ஆக்சைடு.
கார்பன் மோனாக்சைடினால் ஏற்படும் பிரச்சனை எது?
1) சுவாசப்
பிரச்சனை. 2) உலக வெப்பமயமாதல்.
3) அமில
மழை. 4) வாந்தி.
விடை
: சுவாசப் பிரச்சனை.
முக்கிய வினாக்கள்
புவியைச் சுற்றிக் காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள பகுதி எது?
1) அடி
வளிமண்டலம். 2) அயனி மண்டலம்.
3) புற
வளிமண்டலம். 4) வளிமண்டலம்.
விடை
: அடி வளிமண்டலம்.
காற்றின் இயக்கம் அதிகம் காணப்படும் வளிமண்டல அடுக்கு எது?
1) அடி
வளிமண்டலம் 2) அயனி மண்டலம்.
3) புற
வளிமண்டலம். 4) வளிமண்டலம்.
விடை
: அடி வளிமண்டலம்.
வானூர்தி பயணிக்கும் வளிமண்டல அடுக்கு எது?
1) அடி
வளிமண்டலம். 2) அயனி மண்டலம்.
3) புற
வளிமண்டலம். 4) அடுக்குவளிமண்டலம்.
விடை
: அடுக்கு வளிமண்டலம்.
ஓசோன் படலம் காணப்படும் வளிமண்டல அடுக்கு எது?
1) அடி
வளிமண்டலம். 2) அயனி மண்டலம்.
3) புற
வளிமண்டலம். 4) அடுக்குவளிமண்டலம்.
விடை
: அடுக்கு வளிமண்டலம்.
ஆக்சிஜனைப் பற்றிய சரியான கூற்று எது?
1) முழுமையாக
எரியும் வாயு. 2) பகுதியளவு எரியும் வாயு.
3) எரிதலுக்குத்
துணை புரியும் வாயு. 4) எரிதலுக்குத் துணை
புரியாத வாயு.
விடை
: எரிதலுக்குத் துணை புரியும் வாயு.
பொருத்துக.
நைட்ரஜன் - உரம்.
ஆக்சிஜன் - தீயணைப்பான்.
கார்பன்
டை ஆக்சைடு - சுவாசம்.
குளோரோ
புளூரோ கார்பன் - குளிர் பதனப் பெட்டி.
விடை
:
நைட்ரஜன் -
உரம்.
ஆக்சிஜன் -
சுவாசம்.
கார்பன் டை ஆக்சைடு - தீயணைப்பான்.
குளோரோ புளூரோ கார்பன் - குளிர் சாதனப் பெட்டி.
காற்று ஒரு கலவை என்பதைச் சோதனை மூலம் நிரூபித்தவர் யார்?
1) லவாய்சியர். 2) ஜோசப் பிரீஸ்ட்லீ.
3) டேனியல்
ரூதர்போர்டு. 4) ஷீலே.
விடை
: ஜோசப் பிரீஸ்ட்லீ.
தாவரங்கள்
ஒளிச்சேர்க்கை செய்ய சூரிய ஒளி அவசியம் என்பதை நிரூபித்தவர் யார்?
1) லவாய்சியர். 2) ஜோசப் பிரீஸ்ட்லீ .
3) ஜான்
இன்ஜென்ஹவுஸ். 4) ஹேபர்.
விடை
: ஜான் இன்ஜென்ஹவுஸ்.
*****
No comments:
Post a Comment