Monday, 21 September 2026

எட்டாம் வகுப்பு - தமிழ் - காலாண்டுத் தேர்வு வினா விடை

எட்டாம் வகுப்பு

காலாண்டுத் தேர்வு – 2026

தமிழ்

பகுதி - I

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                  (15 x 1 = 15)

1.      தமிழ் தாய் ஐம்பெருங்காப்பியங்களை _________________ அணிந்துள்ளது.

விடை: இ) அணிகலன்களாக

2.      தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ______________ காரணமாக அமைந்தது.

விடை: இ) அச்சுக்கலை

3.      தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் _________________.

விடை: ஆ) தந்தை பெரியார்

4.      மார்பை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துகள் _________________.

விடை: இ) மெல்லினம்

5.      அங்கண்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________.

விடை: அ) அம் + கண்

6.      மலர்களிலிருந்து வரும் _________________ வண்டுகளை ஈர்க்கும்.

விடை: ஈ) கந்தம்

7.      நோய்கள் பெருக மனிதன் _________________ விட்டு விலகியதுதான் முதன்மைக் காரணமாகும்.

விடை: ஈ) இயற்கையை

8.      கடல்ஓடாஎனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி _________________.

விடை: ஈ) பிறிதுமொழிதல் அணி

9.      மறைப்பொருளைக் காத்தல் _________________ எனப்படும்.

விடை: ஈ) நிறை

10.  பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் _________________.

விடை: ஆ) கல்லாதவர்

11.  என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் _________________ இன்றி வாழ்ந்ததார்.

விடை: ஆ) அகம்பாவம்

12.  பின்வருவற்றுள் இறந்தகால வினைமுற்று _________________.

விடை: அ) படித்தான்

13.  நம்மை _________________ பொறுத்துக் கொள்ள வேண்டும்.

விடை: அ) இகழ்வாரைப்

14.  வல்லுருவம்என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________________.

விடை: ஆ) வன்மை + உருவம்

15.  மாடு வயலில் புல்லை மேய்ந்தது. இத்தொடரிலுள்ள வினைமுற்று _________________.

விடை: ஈ) மேய்ந்தது

பொருத்துக.                                                                                               (4 x 1 = 4)

16.  க், ங்            நாவின் முதல், அண்ணத்தின் அடி

17.  ச், ஞ்              நாவின் இடை, அண்ணத்தின் இடை

18.  ட், ண்                        நாவின் நுனி, அண்ணத்தின் நுனி

19.  த், ந்                நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி

பகுதி - II

பிரிவு - 1 (எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்)

20. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

விடை: தமிழ், ழ்கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தனது புகழைக் கொண்டு வாழ்கிறது.

21. பட்ட மரம் எதனால் தனது அழகை இழந்தது?

விடை: வெயியில் வாடி, காலம் பல கடந்து நின்றதாலும், வறட்சி காரணமாகவும் பட்டமரம் தனது அழகை இழந்தது.

22. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்கான காரணம் என்ன?

விடை: ஓலைச்சுவடிகளில் எழுதும் போது நேர்கோடுகளையோ புள்ளிகளையோ எழுதினால் ஓலை கிழிந்துவிடும் என்பதால் அவற்றைப் பயன்படுத்த இயலவில்லை.

23. பிறிதுமொழிதல் அணி என்பது யாது?

விடை: உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை ஊகிக்க வைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.

24. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியன யாவை?

விடை: நாள்தோறும் நடைபயிற்சி செய்ய வேண்டும். யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். ல்ல நூல்களைப் படிக்க வேண்டும்; சான்றோர்களின் அறிவுரைகளைக் பின்பற்றி நேர்வழியில் நடக்க வேண்டும்.

25. பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?

விடை: தலைவர் தம் குற்றத்தை நீக்கிப் பிறர் குற்றத்தை நீக்குவது பழியின்றி வாழும் வழியாகும்.

26. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?

விடை: நாம் பிறந்த மண்ணும், நம்மை வளர்த்து ஆளாக்கும் தாயும் ஒன்றாக மதிக்கப்படுவதால் 'தாய்நாடு' என்னும் பெயர் பிறக்கிறது.

27. தமிழ் யாரால் காக்கப்படுவதாகத் தமிழழகனார் கூறுகிறார்?

விடை: தமிழ், புலவர்களாலும் சங்கப் பலகையிலிருந்த சான்றோர்களாலும் காக்கப்படுவதாகத் தமிழழகனார் கூறுகிறார்.

பிரிவு - 2 (எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்)

28. "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" இக்குறட்பாவில் அமைந்துள்ள அணியை எழுதுக.

விடை: உவமை அணி.

29. கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துகள் எவை?

விடை: உயிரெழுத்துகள் பன்னிரெண்டும், இடையின மெய்கள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறப்பவை.

30. கலைச்சொல் எழுதுக.

அ) Vowel – உயிரெழுத்து

ஆ) Antibiotic – எதிர்ப்புயிர் / நச்சுமுறி மருந்து

31. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?

விடை:, இய, யர், அல் என்பவை வியங்கோள் வினைமுற்று விகுதிகள் ஆகும்.

32. பின்வரும் தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக்குறிகளை இட்டு எழுதுக.

அ) பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்.

ஆ) தமிழ் மொழி செம்மையானது; வலிமையானது; இளமையானது.

33. ழகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.

  • ழகரம்: நாவின் நுனி மேல்அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொட்டுத் தடவப் பிறக்கிறது.
  • லகரம்: நாவின் நுனி மேல்வாய்ப்பல்லின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.
  • ளகரம்: நாவின் நுனி மேல்அண்ணத்தைத் தொட்டுத் தடவுவதால் பிறக்கிறது.

34. வினைமுற்றுக்கு உரிய வேர்ச்ச சொல்லை எழுதுக.

அ) தருகின்றனர் - தா

ஆ) நடக்கிறது - நட

35. மரங்கள் பட்டுவிடாமல் காக்க, செய்ய வேண்டியனவற்றுள் இரண்டனை எழுதுக.

1.      மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

2.      புதிய மரக்கன்றுகளை நட்டுப் பாதுகாக்க வேண்டும்.

பகுதி - III

பிரிவு - 1 (எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்)

36. தமிழையும் கடலையும் ஒப்பிட்டுத் தமிழழகனார் கூறுவன யாவை?

  • தமிழ்: முத்தமிழ் (இயல், இசை, நாடகம்) வளர்த்தது; சங்கப் பலகையிலிருந்து காக்கப்பட்டது; ஐம்பெரும் காப்பியங்களை அளித்தது.
  • கடல்: முத்தினைத் தருகிறது; மூவகைச் சங்கினைத் தருகிறது; அலைகளைத் தந்து சங்கினைக் காக்கிறது.

37. ‘கூடா ஒழுக்கம்அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறட்பாக்களின் கருத்துகளை எழுதுக.

மனதில் தீய எண்ணங்களை வைத்துக்கொண்டு, வெளிப்படையாக நல்லவர்கள் போல் நடிப்பது பெரும் குற்றமாகும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது கொடிய பாவமாகும். இத்தகைய கூடா ஒழுக்கத்தை உடையவர்கள் வாழ்வில் எப்பொழுதும் உயர்வு பெற மாட்டார்கள்.

38. புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

மனிதன் தன் புத்தியைத் தீட்டி, எதையும் ஆராய்ந்து பார்த்து வாழ வேண்டும். புறம்பேசும் மனிதர்களின் பேச்சைக் கேட்காமல் இருக்க வேண்டும். கோபத்தை அடக்கி, மனிதநேயத்துடன் மற்றவர்க்கு உதவும் பண்போடு வாழ்வதே புத்தியைத் தீட்டி வாழும் முறையாகும்.

பிரிவு - 2 (எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்)

39. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.

காலத்திற்கேற்ப தமிழ் எழுத்துகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. நெடில்களைக் குறிக்க துணைக்கால், இரட்டைக் கொம்பு பயன்பட்டன. குற்றியலுகரத்திற்குப் புள்ளியிடும் வழக்கம் மறைந்தது. அச்சுக்கலை தோன்றிய பின்பு தமிழ் எழுத்துகள் இன்றைய சீரான நிலையான வடிவத்தைப் பெற்றன.

40. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும் அறிவுரைகள் யாவை?

குழந்தைகள் துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகளை உண்ணக்கூடாது. அதற்குப் பதிலாக வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சத்தான காய்கறிகள், கீரைகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

41. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.

அ) வேர்ப்பாரு: தழைபாரு மிஞ்சினக்கால் பற்பசெந்தூரம் பாரேஎன்பது சித்தர்களின் வாக்கு.

ஆ) சித்தர் மருத்துவ முறையில் தாவரங்கள் மட்டுமின்றி, உலோகங்களையும் பாசாணங்களையும் தாதுப்பொருட்களையும் மருந்தாகப் பயன்படுத்தும் வன்மை உண்டு.

இ) நாட்பட்ட நோய் என்பது குறிப்பது நீண்ட காலமாக இருந்து வரும்

பிரிவு - 3 (எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்)

42. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

ஏவல் வினைமுற்று

வியங்கோள் வினைமுற்று

1. கட்டளையை மட்டும் குறிக்கும்.

1. வாழ்த்துதல், வேண்டுதல், வைதல் போன்ற பொருள்களைத் தரும்.

2. முன்னிலைக்கு மட்டுமே உரியது (நீ படி).

3. இரு திணைகளிலும், ஐம்பால்களிலும் வரும்.

3. விகுதி பெற்றும் பெறாமலும் வரும்.

3. விகுதிகள் பெற்று மட்டுமே வரும் (க, இய, இயர், அல்).

43. , , ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.

  • ணகரம்: நாவின் நுனி மேல்அண்ணத்தின் அன்னப்பகுதியைத் தொடுவதால் பிறக்கிறது.
  • னகரம்: நாவின் நுனி மேல்வாய்ப்பல்லின் அடிப்பகுதியைத் தொடுவதால் பிறக்கிறது.
  • நகரம்: நாவின் நுனி மேல்வாய்ப்பல்லின் அடியைத் தொடுவதால் பிறக்கிறது.

44. எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?

உயிர, மெய் எழுத்துகள் பிறப்பதற்கு உடலின் உறுப்புகளான மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகியவையும், இயங்கும் உறுப்புகளான நாக்கு, அண்ணம், பல், உதடு போன்றவையும் காரணமாக அமைகின்றன. இவ்வாறு பிறப்புறுப்புகளின் முயற்சியால் எழுத்துகள் தோன்றுவதே எழுத்துகளின் பிறப்பு எனப்படும்.

பகுதி - IV

அடிமாறாமல் எழுதுக. (2 + 3 = 5)

45. ‘கொளல்என முடியும் குறளை எழுதுக.

கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன

வினைபடு பாலாற் கொளல்.

46. அ) திங்களைப் போற்றுதும்எனத் தொடங்கும் இயற்கையைப் போற்றுவோம்பாடலை அடிமாறாமல் எழுதுக.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கலர்தார் சென்னி குளிர்வெண்குடை போன்றிவ்

அங்கண் உலகு அளித்தலான்.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

மேரு வலம் திரிதலான்.

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலி உலகிற்கு அவன்அளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்.

பகுதி - V

வினாக்களுக்கு விடையளிக்கவும்                                                     (3 x 6 = 18)

47. கலைத் திருவிழாப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்ற உங்கள் நண்பனுக்குப் பாராட்டு கடிதம் எழுதுக.

அன்பு நண்பன் முகிலனுக்கு,

            கபிலன் எழுதுவது. நான் நலம்; இங்கு உன்னுடைய நலம் அறிய ஆவல்.

மாநில அளவிலான கலைத் திருவிழாப் போட்டியில் ஓவியப் பிரிவில் நீ முதல் பரிசு பெற்றுள்ளாய் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிந்தேன். உன் கடின உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இது. உன்னை நேரில் சந்தித்து வாழ்த்த என் மனம் துடிக்கிறது. தொடர்ந்து உன் கலைத்திறனை வளர்த்து மேலும் பல சாதனைகளைப் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்!

அன்புடன்,

. கபிலன்.

உறைமேல் முகவரி :

த. கபிலன்,

த/பெ, இரா. தமிழரசன்,

100/108, அய்யனார் கோயில் சந்து,

மன்னார்குடி – 614 001

48. ஆ) நடுவுநிலைமைஅதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறட்பாக்களின் கருத்துகளை எழுதுக.

திருவள்ளுவர் நடுவுநிலைமை அதிகாரத்தில் நேர்மை மற்றும் சமநோக்கு குறித்து பல அருமையான கருத்துகளைக் கூறியுள்ளார்:

1.      தராசு போல் நடுவுநிலைமை : தராசு எவ்வாறு கோணாமல் சமமாக இருந்து பொருளைத் தூக்குகிறதோ, அதுபோலவே நடுநிலை தவறாமல் வாழ்வதே சிறந்த மனிதர்களின் குணமாகும்.

2.      எச்சம் : நடுவுநிலை உடையவர், நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும், பழியினாலும் அறியப்படும்.

49. அ) எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.

மனிதன் தன் எண்ணங்களை வெளிப்படுத்த முதலில் ஒலிகளைப் பயன்படுத்தினான். பின்னர் தன் கருத்துக்களைப் பிறருக்கு உணர்த்த ஓவியங்களை வரைந்தான்.

  • நிலைத்த வடிவம்: காலப்போக்கில் கருத்துக்கள் குறியீடுகளாக மாறின. ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய ஒலிகள் குறியீடுகளாக வடிவம் பெற்றன.
  • எழுத்து உருவாக்கம்: சுவடிகளிலும் கல்லிலும் செதுக்கப்படும்போது நேர்க்கோடுகளும் வளைவுகளும் தோன்றின.
  • அச்சுக்கலை: பிற்காலத்தில் அச்சுக்கலை தோன்றியதன் மூலம் தமிழ் எழுத்துகள் இன்றைய சீரான, நிலையான வடிவத்தைப் பெற்றன.

பகுதி - VI

வினாக்களுக்கு விடையளிக்கவும்                                                     (2 x 8 = 16)

50. ஆ) தமிழில் ஓரெழுத்து ஒருமொழியின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

  • முன்னுரை: தமிழ்மொழி தொன்மையானது மட்டுமல்லாமல் செழுமையானதுமாகும். அதில் ஓரெழுத்தே ஒரு சொற்பொருளைத் தரும் தனிச்சிறப்பு மிக்க சொற்கள் ஏராளமாக உள்ளன.
  • நெடில் எழுத்துகள்: நன்னூலார் காலத்தில் ஓரெழுத்து ஒருமொழிகள் 42 எனக் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் '', '', '', '', '', '' போன்ற நெடில் எழுத்துகள் தனித்து நின்று பொருளைத் தருகின்றன.
  • குறில் எழுத்துகள்: 'நோ', 'து' போன்ற சொற்களும் ஓரெழுத்து ஒருமொழிகளாக விளங்குகின்றன.
  • பொருட்செறிவு: ஒரு எழுத்தே ஒரு முழுமையான சொற்பொருளைத் தருவது தமிழின் தனிச்சிறப்பாகும். எடுத்துக்காட்டாக, 'பூ' என்றால் மலர், 'கை' என்றால் உறுப்பு. மா என்பதிலிருந்து மாநகர், மாநாடு, மாநிறம், மாநிலம் போன்ற சொற்கள் பிறக்கின்றன.
  • முடிவுரை: தமிழ் மொழியின் சொற்களஞ்சியத்தின் பெருமைக்கு இந்த ஓரெழுத்து ஒருமொழிகள் மிகச் சிறந்த சான்றாகும்.

51. ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

தலைப்பு: நூலகம்

  • முன்னுரை: "கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை" என்றார் வள்ளுவர். அத்தகைய கல்வியையும் அறிவையும் வளர்க்கும் ஆலயமாக விளங்குவது நூலகம் ஆகும். நூலகம் என்பது அறிவுக் கோட்டையாகும்.
  • நூலகத்தின் தேவை: மனிதனின் அறிவுப் பசியைத் தீர்க்கவும், பல்வேறு துறைகளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளவும் நூலகம் அவசியமாகிறது. விலைமதிப்பற்ற நூல்களை வாங்கிப் படிக்க முடியாத ஏழை எளிய மாணவர்களுக்கு நூலகங்கள் பேருதவியாக இருக்கின்றன.
  • வகைகள்: நூலகங்கள் பல வகைப்படும். அவை:

1.      பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்கள்

2.      பொது நூலகங்கள்

3.      நடமாடும் நூலகங்கள்

4.      இணைய நூலகங்கள்

  • நூலகத்தில் உள்ளவை: நூலகத்தில் பல்வேறு தலைப்புகளிலான புத்தகங்கள், அகராதிகள், கலைக்களஞ்சியங்கள், நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்கள் போன்றவை முறையான வரிசைப்படி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
  • படிக்கும் முறை: நூலகத்திற்குச் சென்றதும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும். நமக்குத் தேவையான புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து, உரிய இடத்தில் அமர்ந்து நிதானமாகப் படிக்க வேண்டும். வாசித்த குறிப்புகளைக் குறித்து வைத்துக் கொள்ளலாம்.
  • முடிவுரை: "நூல்கள் பல கற்றோம்" என்ற நிலையை உருவாக்குவது நமது கடமையாகும். "வீட்டுக்கொரு நூலகம்" அமைப்போம்; அறிவுள்ள சமுதாயத்தை உருவாக்குவோம்.

*****

No comments:

Post a Comment