தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித்
தேர்வு.
National Means Cum Merit
Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன் (SAT).
அறிவியல்.
ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம்
வகுப்பு.
வேதியியல்.
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்.
பருப்பொருளின் அடிப்படை அலகு அணு.
பேரண்டத்தில் அதிகம் காணப்படுவது ஹைட்ரஜன் அணுவாகும். அது
74 சதவீதம் காணப்படுகிறது.
புவியில் அதிகம் காணப்படுவது ஆக்சிஜன், சிலிக்கா, இரும்பு
போன்ற அணுக்கள் ஆகும்.
ஒரே வகை அணுக்களால் ஆனது தனிமம். இச்சொல்லை அறிமுகம் செய்தவர்
பாயில்.
வேதிப்பண்புகளின் அடிப்படையில் தனிமங்கள் உலோகங்கள், அலோகங்கள், உலோகப்போலிகள்
எனப் பிரிக்கப்படுகின்றன.
போரான், சிலிக்கான், ஜெர்மானியம், ஆர்சனிக், ஆண்டிமணி,
டெலூரியம், பொலோனியம், ஆஸ்டடைன் ஆகிய 8 உலோகப்போலிகள் உள்ளன.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்களின் வேதிப்பிணைப்பால்
உருவாவது மூலக்கூறு.
மந்த வாயுக்கள் ஓரணு மூலக்கூறுகளாகும்.
O2, H2, ஹெச்ஓ என்பன ஈரணு மூலக்கூறுகளாகும்.
O3, SO2, CO2 என்பன மூவணு
மூலக்கூறுகளாகும்.
P4, S8, C6H12O6
என்பன பல அணு மூலக்கூறுகளாகும்.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் குறிப்பிட்ட
நிறை விகித வேதிச் சேர்க்கையால் உருவாவதே சேர்மம் ஆகும்.
சேர்மங்களைத் தனிமங்களாக ஆய்வகங்களில் பிரிக்க இயலும்.
புரதம், கார்போஹைட்ரேட் என்பன கரிமச் சேர்மங்கள்.
சுண்ணாம்பு, ரொட்டி சோடா என்பன கனிமச் சேர்மங்கள்.
சேர்மம் எந்த நிலையில் இருப்பினும் தனிம விகிதம் மாறாது.
ஜான் டால்டன் தனிமங்களைப் படங்களைக் கொண்டு குறித்தார்.
பெர்சீலியஸ் தனிமங்களைக் குறிப்பதற்கு ஆங்கில எழுத்துகளைப்
பயன்படுத்தினார்.
ஹைட்ரஜன், கார்பன், ஆக்சிஜன் போன்றவை முதல் எழுத்தைக் குறியீடாகக்
கொண்ட தனிமங்களாகும்.
அலுமினியம், நிக்கல், ஹீலியம் போன்றவை இரண்டு எழுத்துகளைக்
குறியீடாகக் கொண்ட தனிமங்களாகும்.
தங்கம், வெள்ளி, தாமிரம் போன்றவை லத்தீன் பெயர்களால் குறிப்பிடப்படும்
தனிமங்களாகும்.
அமெர்சியம், யுரோப்பியம் போன்றவை நாடுகளின் பெயர்களால்
குறிப்பிடப்படும் தனிமங்களாகும்.
பாதரசம், புளூட்டோனியம், நெப்டியூனியம், யுரேனியம் போன்றவை
கோள்களின் பெயரால் குறிப்பிடப்படும் தனிமங்களாகும்.
நோபிலியம் அறிவியல் அறிஞர் பெயரால் குறிப்பிடப்படும் தனிமமாகும்.
மயில் துத்தம் எனப்படுவது தாமிர சல்பேட்.
பச்சை துத்தம் எனப்படுவது இரும்பு சல்பேட்.
சால்ட் பீட்டர் எனப்படுவது பொட்டாசியம் நைட்ரேட்.
சிலி சால்ட் பீட்டர் எனப்படுவது சோடியம் நைட்ரேட்.
சலவை சோடா எனப்படுவது சோடியம் கார்பனேட்.
சமையல் சோடா எனப்படுவது சோடியம் பை கார்பனேட்.
எரிசோடா எனப்படுவது சோடியம் ஹைட்ராக்ஸைடு.
விட்ரியால் எண்ணெய் எனப்படுவது கந்தக அமிலம்.
ஜிப்சம் எனப்படுவது கால்சியம் சல்பேட்.
பாரீஸ் சாந்து எனப்படுவது கால்சியம் சல்பேட் ஹெமி ஹைட்ரேட்.
மூரியேட் ஆப் பொட்டாஷ் எனப்படுவது பொட்டாசியம் குளோரைடு.
சாதாரண உப்பு எனப்படுவது சோடியம் குளோரைடு.
சலவைத் தூள் எனப்படுவது கால்சியம் ஆக்சி குளோரைடு.
சுட்ட சுண்ணாம்பு எனப்படுவது கால்சியம் ஆக்ஸைடு.
வினிகர் எனப்படுவது அசிட்டிக் அமிலம்.
சர்க்கரை எனப்படுவது சுக்ரோஸ்.
NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
அறுவை சிகிச்சை சாதனங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகம் எது?
1) எஃகு. 2) வெண்கலம்.
3) துருப்பிடிக்காத
எஃகு. 4) டியூராலுமின்.
விடை
: துருப்பிடிக்காத எஃகு.
புவியில் ஆக்சிஜனுக்கு அடுத்து அதிக அளவில் உள்ள தனிமம் எது?
1) ஹைட்ரஜன். 2) சிலிக்கான்.
3) கார்பன். 4) நைட்ரஜன்.
விடை
: சிலிக்கான்.
எக்ஸ் கதிர் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் உலோகம் எது?
1) தாமிரம். 2) வெள்ளி.
3) காரீயம். 4) அலுமினியம்.
விடை
: காரீயம்.
பற்களை வலிமையாக வைத்திருக்கப் பற்பசையில் பயன்படுத்தப்படும் வாயு எது?
1) ஆர்கான். 2) நியான்.
3) புளூரின். 4) பாஸ்பரஸ்.
விடை
: புளூரின்.
பொருத்துக.
ஓரணு
மூலக்கூறு - சல்பர்.
ஈரணு
மூலக்கூறு - மந்த வாயுக்கள்.
மூவணு
மூலக்கூறு - ஆக்சிஜன்.
பல அணு
மூலக்கூறு - ஓசோன்.
விடை
:
ஓரணு மூலக்கூறு - மந்த வாயுக்கள்.
ஈரணு மூலக்கூறு - ஆக்சிஜன்.
மூவணு மூலக்கூறு - ஓசோன்.
பல அணு மூலக்கூறு - சல்பர்.
முக்கிய வினாக்கள்
ஒரு அவுன்ஸ் தங்கத்தை எவ்வளவு கிலோ மீட்டர் நீளத்திற்குக் கம்பியாக நீட்ட
இயலும்?
1)
66. 2) 80. 3) 82. 4) 96.
விடை
: 80.
9000 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் காணப்படுவது எது?
1) ஆக்சிஜன். 2) கால்சியம்.
3) கார்பன். 4) காட்மியம்.
விடை
: கார்பன்.
காலமைன் என்று அழைக்கப்படுவது எது?
1) சோடியம்
கார்பனேட். 2) பொட்டாசியம் கார்பனேட்.
3) துத்தநாக
கார்பனேட். 4) கால்சியம் கார்பனேட்.
விடை
: துத்தநாக கார்பனேட்.
சேர்மங்களின் எண்ணிக்கை மொத்தம் எத்தனை?
1)
112. 2) 118.
3)
247. 4) எண்ணிலடங்காதவை.
விடை
: எண்ணிலடங்காதவை.
பொதுவாக நெகிழிப் பொருட்கள் சிதைய ஆகும் காலம் எவ்வளவு?
1)
500 ஆண்டுகள். 2) 50 ஆண்டுகள்.
3)
750 ஆண்டுகள். 4) 1000 ஆண்டுகள்.
விடை
: 1000 ஆண்டுகள்.
எத்தனிமத்திற்கு டால்டன் குறியீடு மற்றும் பெர்சீலியஸ் குறியீடு ஒன்று போல்
அமைந்துள்ளது?
1) ஹைட்ரஜன். 2) ஆக்சிஜன்.
3) கார்பன். 4) இரும்பு.
விடை
: ஆக்சிஜன்.
*****
No comments:
Post a Comment