Thursday, 26 November 2026

NMMS - நீர்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

அறிவியல்.

எட்டாம் வகுப்பு.

13. நீர்.

புவியில் உயிரினங்கள் தோன்றக் காரணமான முதன்மைப் பொருள் நீர்.

நீரின் முதன்மை ஆதாரம் மழை.

நீரின் மூன்று நிலைகளாவன, திட நிலை – பனிக்கட்டி, திரவ நிலை – நீர், வாயு நிலை – நீராவி.

நன்னீர் ஆதாரங்களை நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர், உறைந்த நீர் என வகைப்படுத்தலாம்.

நீரின் மூலக்கூறு வாய்பாடு H டூ O.

நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன், கரியமில வாயு ஆகியன உயிரினங்களின் சுவாசம், ஒளிச்சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

புவியில் நீரின் அளவு குறையாமல் இருக்க காரணம் நீர் சுழற்சி. ஆவியாதல், ஆவி சுருங்குதல், மழை பொழிதல் என்பன நீர் சுழற்சியின் 3 படிநிலைகள்.

பருவ மாற்றம், நீர் மாசுபாடு, முறையற்ற நீர் மேலாண்மை, மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியன நீர் பற்றாக்குறைக்கான காரணங்கள்.

மழைநீர் சேகரிப்பு முதன்மையான நீர்ப் பாதுகாப்பு முறையாகும்.

நீரை மின்னாற்பகுக்கும் போது ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாகவும் பிரிகிறது. நேர்மின் முனையில் ஆக்சிஜனும் எதிர்மின் முனையில் ஹைட்ரஜனும் சேகரமாகிறது.

நீரை மின்னாற்பகுக்கும் போது கார்பன் தண்டுகள் மின்முனைகளாகப் பயன்படுகின்றன.

நீரில் அடங்கியுள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜனின் கன அளவு விகிதம் 2 ஈஸ் டூ 1.

ஹென்றி காவெண்டிஷ் ஹைட்ரஜனை எரியும் காற்று என அழைத்தார். அவர் உலோகங்களுடன் அமிலங்களை வினைபடச் செய்து ஹைட்ரஜனை உருவாக்கினார்.

1781 இல் செயற்கை முறையில் காவெண்டிஷ் ஹைட்ரஜனை ஆக்சிஜன் துணையுடன் எரித்து நீரை உருவாக்கினார்.

உலோக ஆக்சைடுகளை ஹைட்ரஜன் கொண்டு ஒடுக்குதல், காற்றில் ஹைட்ரஜனை எரித்தல், காற்றில் ஹைட்ரோ கார்பன்களை எரித்தல் முறைகளில் நீரைத் தயாரிக்கலாம்.

செரிமானத்தின் போது ஆக்சிஜனுடன் உணவு எரிந்து ஆற்றலுடன் கார்பன் டை ஆக்சைடும் நீரும் வெளியாகின்றன.

நீர் நிறம், மணம், சுவை அற்ற ஒளி ஊடுருவும் திரவம்.

ஒரு வளிமண்டல அழுத்தத்தில் தூய நீரின் உறைநிலை 0 டிகிரி செல்சியஸ், கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ் மற்றும் அடர்த்தி 1 கிராம் பை சென்டி மீட்டர் க்யூப்.

பொருட்கள் உறையும் போது அடர்த்தி அதிகரிக்கும். நீர் இதற்கு நேர்மாறானது. எனவே பனிக்கட்டி நீரில் மிதக்கிறது.

நீரை விட பனிக்கட்டியின் கனஅளவு அதிகம். இதனால் குளிர் பிரதேசங்களில் வலுவான நீர்க்குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பனிக்கட்டியின் கடத்துதிறன் குறைவு. இதனால் மேற்பகுதி உறைந்தும் கீழ்ப்பகுதி நீராகவும் இருக்கும். இதனால் நீர் நிலைகளில் நீர்வாழ் உயிரினங்கள் வாழ முடிகிறது.

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் திரவத்தின் ஆவி அழுத்தம் வளிமண்டல அழுத்தத்திற்குச் சமமாகும் போது திரவம் வாயுவாக மாறும். இவ்வெப்பநிலையே கொதிநிலை.

ஒரு பொருளை வெப்பப்படுத்தும் போது வெப்பநிலை உயராமல், வெப்ப ஆற்றல் அந்தப் பொருள் உருகவோ, ஆவியாகவோ உதவினால் அதனை உள்ளுறை வெப்பம் என்கிறோம்.

நீர் உருகுதலின் உள்ளுறை வெப்பம் 80 கலோரி பை கிராம் அல்லது 336 ஜூல் பை கிராம். நீர் ஆவியாதலின் உள்ளுறை வெப்பம் 540 கலோரி பை கிராம் அல்லது 2268 ஜூல் பை கிராம்.

நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் 4189 ஜூல் பை கிலோ கிராம் பை கெல்வின்.

நீரின் தன்வெப்ப ஏற்புத்திறன் அதிகம் இருப்பதால் சூடாவதைத் தடுக்க ரேடியேட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது.

தூய நீர் நடுநிலையானது. லிட்மஸ் சோதனை இதனை உறுதி செய்யும்.

2000 டிகிரி செல்சியசுக்கு மேல் 0.02 சதவீத நீர் சிதைந்து ஹைட்ரஜன், ஆக்சிஜன் வாயுவாகப் பிரிகிறது.

நீர் வினையூக்கியாகவும் செயல்படுகிறது.

நீர் உலோகங்களுடன் வினைபுரிந்து ஹைட்ராக்சைடுகளையும் ஹைட்ரஜனையும் வெளியிடுகிறது.

சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற உலோகங்களுடன் நீர் அதிவேகமாக வினை புரிகிறது.

இரும்பு நீருடன் வினைபட்டு இரும்பு ஆக்சைடாக மாறுவது அரிமானம். 

தாமிரம் எந்த வெப்பநிலையிலும் நீருடன் வினைபுரிவதில்லை.

செஞ்சூடான கார்பன் நீராவியுடன் வினைபுரிந்து நீர் வாயுவைத் (கார்பன் மோனாக்சைடு + ஹைட்ரஜன்) தருகிறது.

குளோரின் நீரில் கரைந்து ஹைட்ரோ குளோரிக் அமிலத்தைத் தருகிறது.

நீர் ஒரு சர்வ கரைப்பான்.

நிறமற்ற, நுண்ணுயிரிகளற்ற, தாது உப்புகள் 20 மில்லி கிராம் பை லிட்டர் அளவில் உள்ள நீர் அருந்தத்தக்கது.

நீரில் அதிகபட்சமாக 35.6 சதவீதம் ஆக்சிஜன் உள்ளது.

நீரில் கரைந்துள்ள கார்பன் டை ஆக்சைடு சுண்ணாம்புடன் வினைபுரிந்து கால்சியம் பை கார்பனேட் உருவாகிறது. கடல்வாழ் உயிரினங்களின் ஓடுகளை உருவாக்க இது அவசியமாகும்.

வீழ்படிவாதலைத் துரிதப்படுத்த பொட்டாஷ் படிகாரம் பயன்படுத்தப்படுகிறது.

ஆக்சிஜனைப் பயன்படுத்தி நீரைத் தூய்மை செய்யும் முறைக்குக் காற்றேற்றம் என்றும், ஓசோனைப் பயன்படுத்தித் தூய்மை செய்யும் முறைக்கு ஓசோனேற்றம் என்றும், குளோரினைப் பயன்படுத்தித் தூய்மை செய்யும் முறைக்கு குளோரினேற்றம் என்றும் பெயர்.

ஆர்.ஓ. (Reverse Osmois) முறையில் தூய்மை செய்ய புறஊதா (யூ.வீ.) அலகுகளும் பயன்படுத்தப்படுகின்றன.

கடினநீரிலுள்ள உப்புகள் துணிகளுடன் சேர்ந்து ஸ்கம் என்பதை உருவாக்கி சேதப்படுத்துகின்றன.

நீரின் கடினத்தன்மையைக் கொதிக்க வைத்தல், வேதிப்பொருட்களைச் சேர்த்தல் (சோடியம் கார்பனேட் எனும் சலவை சோடா), அயனிப் பரிமாற்ற முறை, வாலை வடித்தல் முறையில் நீக்கலாம்.

சராசரியாக ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் நீரைப் பயன்படுத்துகிறார்.

நீர் நிலைகளில் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருட்கள் (டை குளோரோ டை பினைல் டிரை குளோரோ ஈத்தேன் போன்றவை) கலப்பதற்கு யூட்ரோபிகேசன் என்று பெயர்.

மின் நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட வெப்ப நீர் நீரில் உள்ள ஆக்சிஜன் அளவைக் குறைக்கிறது.

NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

ஓர் ஆக்சிஜன் அணு, இரண்டு ஹைட்ரஜன் அணு சேர்ந்த நீர் என்ற சேர்மத்தின் நிறை விகிதம் எவ்வளவு?

            1) 1 : 2.                                                            2) 8 : 1.

            3) 1 : 8.                                                            4) 2 : 1.

விடை : 1 : 8.

கூற்று : பனிக்கட்டி வெப்பத்தை ஏற்று உருகி நீராகிறது.

காரணம் : மேற்கண்ட நிகழ்வு வெப்பம் ஏற்கும் மாற்றம் ஆகும்.

            1) கூற்று மற்றும் காரணம் சரி.     

            2) கூற்று மற்றும் காரணம் தவறு.

            3) கூற்று சரி, காரணம் அதை விளக்கவில்லை.            

            4) கூற்று சரி, காரணம் அதை விளக்குகிறது.

விடை : கூற்று சரி, காரணம் அதை விளக்குகிறது.

முக்கிய வினாக்கள்

ஒவ்வொரு லிட்டர் கடல் நீரிலும் கரைந்துள்ள சாதாரண உப்பின் அளவு எவ்வளவு?

            1) 35 கிராம்.                                      2) 350 கிராம்.                       

            3) 3.5 கிராம்.                                     4) 3.75 கிராம்.

விடை : 35 கிராம்.

உலக நீர் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

            1) ஜனவரி 22.                                               2) பிப்ரவரி 22.         

            3) மார்ச் 22.                                        4) ஏப்ரல் 22.

விடை : மார்ச் 22.

முக்கிய வினாக்கள்

தூய நீரின் பீ.ஹெச். மதிப்பு எவ்வளவு?

            1) 7.                                                     2) 7 ஐ விட குறைவு.

            3) 7 ஐ விட அதிகம்.                                    4) 7க்குச் சமம் மற்றும் அதிகம்.

விடை : 7.

ஒவ்வோராண்டும் சுகாதாரமற்ற நீரினால் ஏற்படும் வயிற்றுப் போக்கினால் உலக அளவில் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு?

            1) 8.6 மில்லியன்.                             2) 5.6 மில்லியன்.

            3) 4.6 மில்லியன்.                             4) 3.6 மில்லியன்.

விடை : 4.6 மில்லியன்.

*****

No comments:

Post a Comment