Thursday, 26 November 2026

NMMS - விலங்குகளின் இயக்கம்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

அறிவியல்.

எட்டாம் வகுப்பு.

19. விலங்குகளின் இயக்கம்.

நடத்தல், ஊர்தல், பறத்தல், நீந்துதல் போன்றன இடம் பெயர்வதற்கான உயிரினங்களின் வழிமுறைகள் ஆகும்.

நடத்தல் தன்னிச்சையான இயக்கம். சுவாசம் தன்னிச்சையற்ற இயக்கம்.

கை, கால்கள், இறக்கைகள், கசையிழை (பிளாஜெல்லா), சிலியாக்கள் ஆகியன இடப்பெயர்ச்சிக்கு உதவும் உறுப்புகள்.

இயக்கம் என்பது வேறு. இடம் பெயர்தல் என்பது வேறு. இயக்கம் உயிரியல் முறையில் நடைபெறுகிறது. இதற்கு ஆற்றல் தேவை.

இடப்பெயர்ச்சி உயிரின நிலையில் நடைபெறுகிறது. ஆற்றல் அவசியம் தேவையில்லை.

மண்புழுவின் இயக்கத்திற்கு உதவுபவை சீட்டா.

கரப்பான் பூச்சியின் உடல் கைட்டினால் மூடப்பட்டுள்ளது. மூன்று ஜோடி இணைந்த கால்கள் உள்ளன.

பறவைகளின் பின்னங்கால்கள் நகங்களாக மாறியுள்ளன. முன்னங்கால்கள் இறக்கைகளாக மாறியுள்ளன.

மிதந்து ஊர்தல், கீழ் நோக்கிய அசைவு ஆகிய வகைகளில் பறவைகள் இயக்கம் மேற்கொள்கின்றன.

பாம்புகளின்  இயக்கம் சறுக்கு இயக்கம்.

மீன்கள் துடுப்புகளின் உதவியுடன் நீந்துகின்றன. மீன்கள் இரண்டு இணையான துடுப்புகளையும் ஒரு இணையற்ற துடுப்பையும் பெற்றுள்ளன.

மீன்களுக்குக் காடல் எனும் வால் துடுப்பு திசையை மாற்ற உதவுகிறது.

அமீபாய்டு இயக்கம் போலிக்கால்கள் மூலம் நடைபெறுகிறது.

சிலியரி இயக்கம் ரோமம் போன்ற நீட்சிகளாகிய சிலியாக்களால் நடைபெறுகிறது.

இரண்டு தனித்தனி எலும்புகள் சந்திக்கும் இடம் மூட்டு.

மண்டையோட்டு எலும்பு நிலையான மூட்டு அல்லது அசையா மூட்டு எனப்படுகிறது.

முதுகெலும்புகளுக்கு இடையே உள்ள மூட்டு, விலா எலும்புக்கும் மார்பக எலும்புக்கும் இடையில் உள்ள மூட்டு சற்று நகரக் கூடிய மூட்டு.

பந்துக் கிண்ண மூட்டு, கீல் மூட்டு, முனை அச்சு மூட்டு, முண்டனையா மூட்டு, வழுக்கு மூட்டு, சேண மூட்டு ஆகியன  நகரக் கூடிய அல்லது அசையும் மூட்டுகள் ஆகும்.

தோள்பட்டை, இடுப்பு பகுதிகளில் இருப்பவை பந்துக் கிண்ண மூட்டு.

முழங்கால், முழங்கை, கணுக்காலில் இருப்பவை கீல் மூட்டு.

மணிக்கட்டில் இருப்பது முண்டனையா மூட்டு.

முள்ளெலும்பு வழுக்கு மூட்டு.

கட்டை விரல், உட்செவியில் இருப்பவை சேண மூட்டு.

இரண்டு எலும்புகளிடையே இணைப்பை ஏற்படுத்தும் குறுத்தெலும்பால் இணைக்கப்பட்ட திரவம் நிரம்பிய குழிகளை உடைய மூட்டுகள் சினோவியல் மூட்டுகள்.

சினோவியல் மூட்டுகள் டை ஆர்த்தோசிஸ் மூட்டு அல்லது நெகிழ்வு மூட்டு எனப்படும்.

எலும்புடன் தசையை இணைக்கும் திசுக்களின் இழை நாண்கள் தசைநாண்கள் அல்லது டெண்டான் எனப்படும்.

எலும்புடன் எலும்பை இணைக்கும் திசுக்களின் இழை நாண்கள் தசைநார்கள் அல்லது லிக்மெண்ட் எனப்படும்.

டென்டான் மற்றும் லிக்மெண்ட் இல்லாமல் தசை இயக்கம் நடைபெறாது.

எலும்புக்கூடு புறச்சட்டகம் (எக்சோஸ்கெலிட்டன்), அகச்சட்டகம் (எண்டோஸ்கெலிட்டன்) என இரு வகைப்படும்.

மனித உடலில் உள்ள எலும்புகள் 206.

தசைகளின் இயக்கத்துக்கு நெம்புகோல் போல் செயல்படுவது எலும்புகள்.

காது மடல், மூக்கின் நுனியில் குருத்தெலும்பு காணப்படுகிறது.

அச்சு எலும்புக் கூட்டில் 80 எலும்புகள் உள்ளன.

மண்டை ஓடு 22 எலும்புகளால் ஆனது. அதில் 8 எலும்புகள் சேர்ந்து கிரேனியம் உருவாகிறது.

14 எலும்புகள் இணைந்து முகத்தை உருவாக்குகின்றன.

முள்ளெலும்புத் தொடரில் 7 கழுத்து எலும்புகள், 12 மார்பு எலும்புகள், 5 இடுப்பு எலும்புகள், 5 திருகெலும்புகள், 3 வால் எலும்புகள் உள்ளன.

முள்ளெலும்புகள் வழுக்கு மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன.

மார்பு எலும்பு 12 ஜோடி எலும்புகளால் ஆனது. இவற்றுள் 10 ஜோடி மார்பக எலும்புடன் இணைந்தும் 2 ஜோடி தனித்தும் உள்ளன.

மார்பு எலும்பு இதயம், நுரையீரல், கல்லீரல் உறுப்புகளைப் பாதுகாக்கிறது.

இணையுறுப்பு எலும்புக் கூட்டில் கை, மணிக்கட்டு, மேற்கை எலும்புகள், இடுப்பு, கால், கணுக்கால், பாத எலும்புகள் உள்ளன.

தோள்பட்டை எலும்பு பெக்டோரல் எலும்பு எனப்படுகிறது.

இடுப்பு எலும்பு பெல்விக் வளையம் எனப்படுகிறது. இது ஐந்து இணைந்த முதுகெலும்புகளால் ஆனது.

கை எலும்புகள், கால் எலும்புகள் கீல் மூட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளன.

பீமர் என்பது தொடை எலும்பு ஆகும்.

தசைகள் தோன்றக் கூடிய நிலைத்த முனை, பிற பகுதிகளை இழுக்கும் நகரும் முனை ஆகிய இரு முனைகளைக் கொண்டுள்ளது.

கண்ணில் இருக்கும் ரேடியல் தசை பாவையை அகலமாக்குகிறது. வட்டத்தசை பாவையைச் சிறியதாக ஆக்குகிறது.

வரித்தசை, வரியற்ற தசை, இதயத் தசை என தசைகள் மூவகைப்படும்.

வரித்தசை எலும்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவை தன்னிச்சையான தசை.

வரியற்ற தசை ரத்த நாளங்கள், கருவிழி, மூச்சுக்குழாய் பகுதிகளில் காணப்படும். இவை தன்னிச்சையற்றது.

இதயத் தசை தன்னிச்சையற்றது.

சிறுத்தை மணிக்கு 76 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக் கூடியது.

6 கால் விலங்குகளில் வேகமாக ஓடக் கூடியது கரப்பான் பூச்சி. அது ஒரு மீட்டர் தூரத்தை ஒரு வினாடியில் கடக்கும்.

எலும்பைச் சுற்றியுள்ள உறை பெரியாஸ்டியம்.

நீர்யானை மனிதனை விட வேகமாக ஓடும்.

புன்னகைக்க 17 தசைகளும் கோபப்பட 42 தசைகளும் தேவை.

பீமர் என்ற தொடை எலும்பே நீளமான வலிமையான மனித எலும்பாகும்.

நடுச்செவியில் உள்ள ஸ்டேபஸ் எனும் எலும்பே மிகச்சிறிய லேசான எலும்பாகும்.

NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

பொருத்துக.

            1) பந்து கிண்ண மூட்டு                  - முழங்கை.

            2) கீல் மூட்டு                                                - கணுக்கால் எலும்பு.

            3) வழுக்கு மூட்டு                           - கழுத்து முள் எலும்பு.

            4) முளை மூட்டு                              - இடுப்பு எலும்பு.

விடை :

            பந்து கிண்ண மூட்டு                       – இடுப்பு எலும்பு.

            கீல் மூட்டு                                         – முழங்கை.

            வழுக்கு மூட்டு                                 – கணுக்கால் எலும்பு.

            முளை மூட்டு                                    – கழுத்து முள் எலும்பு.

பொருத்துக.

            1) சினோவியல் திரவம்      - நீளமான அச்சைப் பற்றிச் சுழல அனுமதிக்கிறது.

            2) கீல் மூட்டு                                    - எலும்புடன் எலும்பை இணைக்கிறது.

            3) சுழலச்சு மூட்டு                - மூட்டுகளை வளைக்கவும் நேராக்கவும்

                                                               அனுமதிக்கிறது.

            4) தசைநார்                            - மூட்டு குறுத்தெலும்பு இடையிலான

                                                              உராய்வைக் குறைக்கிறது.

விடை :

            சினோவியல் திரவம்           – மூட்டு குறுத்தெலும்பு இடையிலான

                                                              உராய்வைக் குறைக்கிறது.

            கீல் மூட்டு                             – மூட்டுகளை வளைக்கவும் நேராக்கவும்

                                                              அனுமதிக்கிறது.

            சுழலச்சு மூட்டு                     – நீளமான அச்சைப் பற்றிச் சுழல அனுமதிக்கிறது.

            தசை நார்                               – எலும்புடன் எலும்பை இணைக்கிறது.

தவறான இணையைத் தேர்ந்தெடுக்கவும்.

            1) பீமர்                                   - வலிமையான எலும்பு.

            2) கால் விரல்கள்                 - டார்சல்கள்.

            3) முழங்கால்                                   - பட்டெல்லா.

            4) ஸ்டேபஸ்                         - லேசான எலும்பு.

விடை : கால் விரல்                          – டார்சல்கள்.

தவறான இணைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

            1) கீல் மூட்டு                                    - ஒரு திசையில் மட்டும் இயக்கம்.

            2) முண்டனையா மூட்டு   - மூன்று திசைகளில் இயக்கம்.

            3) பந்துக் கிண்ண மூட்டு   - இரண்டு திசைகளில் இயக்கம்.

விடை : 2 மற்றும் 3.

முக்கிய வினாக்கள்

டை ஆர்த்தோசிஸ் மூட்டு எனப்படுவது எது?

            1) கீல் மூட்டு.                                   2) வழுக்கு மூட்டு.

            3) நெகிழ்வு மூட்டு.                                    4) சேண மூட்டு.

விடை : நெகிழ்வு மூட்டு.

மிக விரைவாக நீந்தும் பாலூட்டி இனம் எது?

            1) வௌவால்.                                  2) டால்பின்.

            3) நீர் யானை.                                   4) நீர் நாய்.

விடை : டால்பின்.

குதிரை சவாரி வடிவ மூட்டு எது?

            1) கீல் மூட்டு.                                   2) வழுக்கு மூட்டு.

            3) பந்து கிண்ண மூட்டு.                 4) சேண மூட்டு.

விடை : சேண மூட்டு.

தசை சுருக்கம், தளர்வுகளைப் பயன்படுத்தி இடம் பெயரும் உயிரினம் எது?

            1) பாம்பு.                                           2) கரப்பான் பூச்சி.

            3) மண்புழு.                                      4) வண்ணத்துப் பூச்சி.

விடை : மண்புழு.

*****

No comments:

Post a Comment