தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.
National Means Cum Merit Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன் (SAT).
சமூக அறிவியல்.
ஏழாம் வகுப்பு – பொருளியல்.
1. உற்பத்தி.
வடிவப் பயன்பாடு, இடப்பயன்பாடு, காலப்பயன்பாடு என பயன்பாடு
மூவகைப்படும்.
பருத்தியிலிருந்து ஆடைகள் தயாரித்தல் வடிவப் பயன்பாடு.
தமிழகத்தில் விளைந்த அரிசியைக் கேரளாவுக்குக் கொண்டு செல்லுதல்
இடப் பயன்பாடு.
உணவுப் பொருட்களைச் சேமித்து வைத்தல் காலப் பயன்பாடு.
முதன்மை நிலை உற்பத்தி, இரண்டாம் நிலை உற்பத்தி, மூன்றாம் நிலை
உற்பத்தி என உற்பத்தி மூவகைப்படும்.
வேளாண்மைத் துறை முதன்மை உற்பத்திக்கு எடுத்துக்காட்டாகும்.
தொழிற்சாலை உற்பத்தி இரண்டாம் நிலை உற்பத்திக்கு எடுத்துக்காட்டாகும்.
வணிகம், வங்கி, கல்வி, காப்பீடு, மருத்துவம் போன்ற சேவைத் துறை மூன்றாம் நிலை உற்பத்திக்கு
எடுத்துக்காட்டாகும்.
நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகிப்பவை
மூன்றாம் நிலை உற்பத்தி அல்லது சேவைத்துறை உற்பத்தி ஆகும்.
உற்பத்தியும் நுகர்வும் பொருளாதாரத்தில் இன்றியமையாத இரண்டு
செயல்கள் ஆகும்.
பொருளாதாரத்தில் உற்பத்தியாளரும் நுகர்வோரும் இன்றியமையாதவர்கள்
ஆவர்.
இந்தியப் பொருளாதாரம் என்பது பொதுத்துறை மற்றும் தனியார் துறை
இணைந்து செயல்படும் கலப்புப் பொருளாதாரம் ஆகும்.
உற்பத்திக்கு உதவுகின்ற காரணிகளை நிலம், உழைப்பு, முதலீடு,
தொழில் முனைவோர் என வகைப்படுத்தலாம்.
நிலம் ஒரு முதன்மை உற்பத்திக் காரணி. நிலத்தின் அளிப்பு நிலையானது.
இயற்கை வளங்கள் அனைத்தும் இவ்வகையிலானவை.
உற்பத்தியில் உழைப்பு ஓர் உள்ளீடாகும். உழைப்பை உழைப்பாளர்களிடமிருந்து
பிரிக்க இயலாது.
பொருளியலின் தந்தை ஆடம் ஸ்மித். நாடுகளின் செல்வம் என்பது இவர்
எழுதிய நூலாகும். வேலை பகுப்பு முறையை அவர் அந்நூலில் அறிமுகம் செய்துள்ளார்.
மூலதனம் என்பது பல்வேறு பண்டங்களை உற்பத்தி செய்வதற்காக மனித
முயற்சியால் உருவாக்கப்பட்டதாகும்.
இயந்திரங்கள், கட்டடங்கள், கருவிகள் போன்றன பருமப் பொருள் மூலதனமாகும்.
வங்கி வைப்புகள், பத்திரங்கள், பங்குகள் போன்றன பண மூலதனம்
ஆகும்.
கல்வி, பயிற்சி, சுகாதாரம் போன்றன மனித மூலதனம் ஆகும்.
தொழில் முனைவோர் தொழில் அமைப்பாளர் என்றும் சமுதாய மாற்றம்
காணும் முகவர் என்றும் அழைக்கப்படுகிறார்.
தொழில் முனைவோர் உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுகிறார்.
உடல் அல்லது மனதால் பயன் கருதி மேற்கொள்ளப்படும் முயற்சியே
உழைப்பு என்றவர் ஆல்பர்ட் மார்ஷல். இவர் மேலும் இயற்கையின் கொடை தவிர்த்த வருமானம்
அளிக்கக்கூடிய பிற வகைச் செல்வங்களே மூலதனம் என்று கூறுகிறார்.
NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினா
சமுதாய மாற்றம்
காணும் முகவர் என யார் அழைக்கப்படுகிறார்?
1) தொழில்
முனைவோர். 2)
முதலீட்டாளர்.
3) நுகர்வோர். 4) உற்பத்தியாளர்.
விடை : தொழில் முனைவோர்.
முக்கிய வினாக்கள்
கரும்பு எவ்வகைப்
பயிர்?
1) பணப்பயிர். 2) தோட்டப்பயிர்.
3) வாணிபப்பயிர். 4)
தோட்டக்கலைப் பயிர்.
விடை : பணப்பயிர்.
‘நன்னெறி கருத்து
உணர்வுக் கொள்கை’ என்ற நூலை எழுதியவர் யார்?
1) ஆடம்
ஸ்மித். 2) ஆல்பர்ட் மார்ஷல்.
3) ஆல்பிரட்
நோபல். 4) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
விடை : ஆடம் ஸ்மித்.
பொறியியல் துறை
சார்ந்த பணிகள் எவ்வகை உற்பத்தியில் அடங்கும்?
1) முதன்மை
நிலை. 2) இரண்டாம் நிலை.
3) மூன்றாம்
நிலை. 4) எதுவுமில்லை.
விடை : இரண்டாம் நிலை.
இயற்கை மனிதனுக்குக்
கொடுத்திருக்கும் இடம் பெயராத கொடை எது?
1) காற்று. 2) நிலம்.
3) நீர். 4) ஆறுகள்.
விடை : நிலம்.
*****
No comments:
Post a Comment