Saturday, 28 November 2026

NMMS - இயற்கை இடர்கள் – பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ளல்.

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

சமூக அறிவியல்.

ஏழாம் வகுப்பு – புவியியல்.

இயற்கை இடர்கள் –

பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ளல்.

இடர் (ஹசார்டு) என்ற சொல் ஹாசர்ட் என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருள் ஒரு பகடை விளையாட்டு என்பதாகும்.

இயற்கை பேரிடர், மனிதரால் உண்டாகும் பேரிடர் என பேரிடர் வகைப்படுத்தப்படுகிறது.

நிலநடுக்கம், சுனாமி, வெள்ளம், பனிச்சரிவு, எரிமலை வெடிப்புகள், சூறாவளி (ஹரிக்கேன்), நிலச்சரிவு, இடி, மின்னல் , தொற்றுநோய்கள் போன்றன இயற்கைப் பேரிடர்கள்.

நெருப்பு, தீ, கட்டிடங்கள் இடிந்து போகுதல், தொழிற்சாலை விபத்துகள், போக்குவரத்து விபத்துகள், தீவிரவாதம், கூட்ட நெரிசல் போன்றன மனிதரால் ஏற்படும் பேரிடர்கள்.

தமிழ்நாட்டில் சுனாமி பாதிப்பு 2004, டிசம்பர் 26 இல் ஏற்பட்டது.

தமிழ்நாட்டை நிஷா (2008), ஜல் (2010), தானே (2011), வர்தா (2016), ஒக்கி (2017), கஜா (2018) ஆகிய புயல்கள் தாக்கியுள்ளன.

சுனாமி என்ற சொல் ஜப்பானிய சொல்லிலிருந்து பெறப்பட்டது. சு என்றால் துறைமுகம் என்றும் னாமி என்றால் அலைகள் என்றும் பொருள். சுனாமி என்றால் துறைமுக அலைகள் என்பது பொருள்.

ஆழிப்பேரலை என்பது சுனாமி என்பதற்கான தமிழ்படுத்தப்பட்ட  சொல்லாகும்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) உள்துறை அமைச்சகத்தின் நிறுவனம்.

தயார்நிலை, கட்டுப்படுத்துதல், மட்டுப்படுத்துதல், துலங்கல், மீட்டல், முன்னேற்றம் என பேரிடர் மேலாண்மை நிலைகள் ஆறு படிநிலைகளைக் கொண்டது.

தேசிய  பேரிடர் மேலாண்மை ஆணையம் 2005 டிசம்பர் 25 இல் அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 80 காவலர்களைக் கொண்ட தனிப்படையாகும்.

அவசர கால மருத்துவ உதவிக்கு 108 , தீ விபத்திற்கு 101 என்ற எண்களை அழைக்க வேண்டும்.

நிலநடுக்கத்தைப் பதிவு செய்யும் கருவி சீஸ்மோகிராப்.

உலகிலேயே மிக அதிக அடர்த்தியான நிலநடுக்கப் பகுதி அமெரிக்கா.

2018 இல் ஏற்பட்ட புழுதிப் புயல் ராஜஸ்தான், உத்திர பிரதேச மாநிலங்களில் பேரிடரை உருவாக்கியது.

2018 இல் தமிழகத்தில் வீசிய கஜா புயல் 120 கி.மீ. வேகத்துக்கு வீசியது.

போபால் விஷ வாயுக் கசிவு (1984) தொழிற்சாலை விபத்தால் ஏற்பட்ட பேரிடராகும்.

NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்.

            1) குண்டு வெடிப்பு.                                   2) எரிமலை வெடிப்பு.      

            3) நில அதிர்வு.                                 4) வறட்சி.

விடை : குண்டு வெடிப்பு.

புயலின் கண் என்பது எது?

            1) கடலோரப் பகுதி.                      2) வெற்றிடம்.

            3) உயர் அழுத்த மண்டலம்.          4) தாழ்வழுத்த மண்டலம்.

விடை : வெற்றிடம்.

முக்கிய வினாக்கள்

உலகிலேயே மிக அதிக நிலநடுக்கங்கள் ஏற்படுவது எங்கு?

            1) ஜப்பான்.                                       2) இந்தியா.

            3) சீனா.                                              4) இந்தோனேசியா.

விடை : ஜப்பான்.

ஆபத்து நிலையைக் குறைப்பது எது?

            1) முன்னறிவிப்பு.                            2) பாதுகாப்பு.

            3) மட்டுப்படுத்துதல்.                     4) தங்கும் இடம் அளித்தல்.

விடை : மட்டுப்படுத்துதல்.

பேரிடரின் தாக்கம் என்பது எது?

            1) மழையளவு.                                 2) கால அளவு.                    

            3) பாதிப்பின் அளவு.                      4) அழிவின் அளவு.

விடை : கால அளவு.

அதிகம் மற்றும் குறைந்த அலைவரிசையில் கிடைப்பது எது?

            1) TV அறிவிப்பு.                               2) ஒலி பெருக்கி.

            3) கம்பியில்லா வானிலை.                       4) டார்ச் லைட்.

விடை : கம்பியில்லா வானிலை.

*****

No comments:

Post a Comment