Saturday, 28 November 2026

NMMS - வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

சமூக அறிவியல் .

ஏழாம் வகுப்பு – புவியியல் .

கண்டங்களை ஆராய்தல் –

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா.

உலகில் ஏழு கண்டங்கள் உள்ளன. அவையாவன, 1. ஆசியா, 2. ஆப்பிரிக்கா, 3. வட அமெரிக்கா, 4. தென் அமெரிக்கா, 5. ஐரோப்பா, 6. ஆஸ்திரேலியா, 7. அண்டார்ட்டிகா.

புதிய உலகு என அழைக்கப்படும் கண்டங்கள் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா.

உலக அளவில் வட அமெரிக்கா 25 சதவீதம் பால் பொருட்களை உற்பத்தி செய்கிறது, 50 சதவீதம் மரக்கூழ், செய்தித்தாள் உற்பத்தி செய்கிறது.

உலக அளவில் வட அமெரிக்கா இரும்பு எஃகு தொழிலின் மையமாக உள்ளது. முதன்மையான கோதுமை ஏற்றுமதியாளராக உள்ளது.

உலக அளவில் வட அமெரிக்கா செயற்கை இழை தயாரிப்பில் இரண்டாமிடம் பெற்றுள்ளது.

உலகின் மிகச் சிறந்த மீன் பிடித்தளம் வட அமெரிக்காவில் உள்ள கிராண்ட் பேங்க்.

உலகின் மிகப் பெரிய நன்னீர் ஏரி வட அமெரிக்காவில் உள்ள சுப்பீரியர் ஏரி.

பூமியின் மிகவும் பழமையான மற்றும் இளமையான பாறைகள் காணப்படும் இடம் மரணப் பள்ளத்தாக்கு.

உலகின் மிகப்பெரிய ரயில்வே நிலையம் சிகாகோ.

உலகின் சர்க்கரைக் கிண்ணம் கியூபா.

வட அமெரிக்காவைக் கண்டறிந்தவர் கொலம்பஸ். அமெரிக்கா எனப் பெயரிட்டவர் அமெரிக்கோ வெஸ்புகி.

வட அமெரிக்காவின் வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும், தெற்கே தென் அமெரிக்காவும், கிழக்கே அட்லாண்டிக் பெருங்கடலும், மேற்கே பசிபிக் பெருங்கடலும் உள்ளன.

வட அமெரிக்கா கண்டத்தின் மிகப் பெரிய நாடு கனடா. இரண்டாவது பெரிய நாடு அமெரிக்கா. மூன்றாவது பெரிய நாடு மெக்சிகோ.

வட அமெரிக்காவின் மிகச் சிறிய நாடு கிரெனடா.

வட அமெரிக்காவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் மெக்சிகோ.

வட அமெரிக்காவின் மிகப்பெரிய சிகரம் மெக்கன்லீ, மிகப் பெரிய ஏரி சுப்பீரியர், மிக நீளமான ஆறு மிசிசிப்பி, மிக ஆழமான பகுதி மரணப் பள்ளத்தாக்கு.

வட அமெரிக்காவில் குடியேறியவர்களில் முதன்மையானவர்கள் ஐரோப்பியர்கள். குளிர் பகுதியில் வாழும் பழங்குடியினர் எஸ்கிமோக்கள்.

வட அமெரிக்காவில் கோதுமை அதிகம் விளைவிக்கப்படும் பகுதி ப்ரெய்ரி புல்வெளி.

வட அமெரிக்காவின் நான்கு முக்கிய இயற்கை அமைப்புகளாவன, 1. ராக்கி மலைத்தொடர், 2. பெரும் சமவெளிகள், 3. அப்பலேசியன் உயர் நிலம், 4. கடற்கரைச் சமவெளி.

வட அமெரிக்காவில் அப்பலேசியன் உயர்நிலப் பகுதியில் நிலக்கரி, இரும்பு, தாமிரம் போன்ற  வளங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

அலாஸ்காவின் வெப்ப நீரோட்டம் காரணமாக வட அமெரிக்காவின் வடமேற்குப் பகுதியில் பனி உறைவதில்லை.

டொரண்டோகான்வெல், கிங்ஸ்டன் பகுதி நூல்கள் அறுபடாமல் இருக்கக் காரணம் அங்கு நிலவும் ஈரப்பதமிக்க குளிர்ந்த காலநிலை.

வட அமெரிக்கா வருடம் முழுவதும் குளிராக இருப்பதற்குக் காரணம் வடக்குத் தெற்காக அமைந்திருக்கும் ராக்கி மலைத்தொடரே.  இதனால் ஆர்க்டிக் பகுதியிலிருந்து வீசும் குளிர் காற்றைத் தடுக்க முடிவதில்லை.

நூற்றுக்கணக்கான கலாச்சாரங்கள் காணப்படுவதால் அமெரிக்க ஐக்கிய நாடுகள் உருகும் பானை அல்லது உருகும் பனி எனப்படுகிறது.

கார்டில் லெராஸ் பல எரிமலைகளைக் கொண்டுள்ளதால் அது பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

வட அமெரிக்கா ஏழு நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது.

மத்திய தரைக்கடல் காலநிலை நிலவும் அமெரிக்க மாகாணம் கலிபோர்னியா.

மேற்கத்திய காற்றுகள் எதிர் வர்த்தக காற்றுகள் எனப்படுகின்றன.

வட அமெரிக்காவில் வில்லோ மரங்கள் தூந்திரக் காடுகளிலும், மழைக்காடுகள் ராக்கி மலைத்தொடரிலும் காணப்படுகின்றன.

ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவில் அறிமுகம் செய்த பயிர் கோதுமை.

வட அமெரிக்காவில் அதிகமான குளிரை எதிர்கொண்டு குறைவான நீரில் வளரக்கூடியன பார்லி, ஓட்ஸ்.

எஸ்கிமோக்களின் பனிக்கட்டி வீடு இக்ளூ.

வட அமெரிக்க சாலைகள் அஸ்பால்ட் மற்றும் காங்கிரீட்டால் போடப்படுகின்றன.

வட அமெரிக்காவின் யூகான் ஆறு ஆண்டின் 8 மாதங்களுக்கு உறைந்த நிலையில் உள்ளது.

பனாமா நிலச்சந்தி வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கிறது.

பேரிங் நீர்ச்சந்தி வடஅமெரிக்காவையும் ஆசியாவையும் இணைக்கிறது.

80 கிலோ மீட்டர் நீளமுள்ள பனாமா கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கிறது.

ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களையும் இணைக்கும் கால்வாய் பனாமா கால்வாய்.

தென் அமெரிக்காவின் வடிவம் தலைகீழ் முக்கோண வடிவம்.

மத்திய அமெரிக்காவுடன் இணைந்து தென் அமெரிக்கா லத்தீன் அமெரிக்கா என அழைக்கப்பட காரணம் அது ஸ்பானியர்கள், போர்ச்சுகீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் காலனியாக இருந்ததாகும்.

ஆண்டிஸ் மலைத்தொடர், மத்திய சமவெளிகள், கிழக்கு உயர்நிலங்கள் ஆகியன தென் அமெரிக்காவின் நிலத்தோற்றங்கள் ஆகும்.

அமேசான் ஆற்றின் முகத்துவாரத்தின் வழியாக பூமத்திய ரேகை செல்கிறது.

உலகின் அடர்த்தியான காடுகள் அமேசான் ஆற்றுப்படுகையில் உள்ளன.

அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, ஈக்வடார், கயானா, பராகுவே, பெரு, உருகுவே, வெனிசுலா, சூரினாம் (மிக சிறிய நாடு) ஆகியன தென் அமெரிக்காவில் உள்ள நாடுகள் ஆகும்.

தென் அமெரிக்காவின் பூமத்திய ரேகை பகுதி தினமும் 4 மணி நேர மழை பெறுகிறது.

கடிகார மழை என்பது வெப்ப சலன மழையாகும்.

உலகின் மிகப் பெரிய நதி அமைப்பும், கிளை நதிகளையும் கொண்டது அமேசான் ஆறு.

உலகிலேயே உயரமான நீர் வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி.

தென் அமெரிக்காவில் உள்ள பாலைவனங்கள் அட்டகாமா பாலைவனம், பாடகோனிய பாலைவனம்.

அடர்ந்த இலையுதிர்க் காடுகளைக் கொண்ட தென் அமெரிக்க பகுதி கிரான்சாக்கோ.

ஆண்டிஸ் மலைச் சரிவுகளில் காணப்படும் காடு மோண்டானா (ஊசியிலைக் காடுகள்).

எர்பா மேட் மரத்தின் இலைகளைக் கொண்டு டீ போன்ற பானம் தயாரிக்கப்படுகிறது.

மலேரியாவைக் குணப்படுத்தும் மருந்து குயினைன்.

உலகின் மிகப் பெரிய பாம்பான அனகோண்டா தென் அமெரிக்காவில் காணப்படுகிறது.

பிரன்ஹா எனும் மாமிச உண்ணி மீன் அமேசான் நதியில் காணப்படுகிறது.

உலகில் மிகப் பெரிய அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு வெனிசுலா.

உலகின் நுரையீரல் எனப்படுவது அமேசான் காடுகள்.

உலகின் காபி பானை எனப்படுவது பிரேசில்.

கோடாலி உடைப்பான் எனும் கடினமான மரம் கியுபிராகோ. இம்மரத்திலிருந்து டானின் தயாரிக்கப்படுகிறது. டானின் தோல் பதனிடப் பயன்படுகிறது.

தென் அமெரிக்காவில் பிரேசில் அதிகமாகச் சர்க்கரை உற்பத்தி செய்கிறது. தென் அமெரிக்காவில் தொழில்மயமாக்கப்பட்ட நாடும் பிரேசில்தான்.

அர்ஜென்டினா நாடு உலகின் முக்கியமான இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடு.

உலகின் மிகப் பெரிய தாமிரச் சுரங்கம் பெரு நாட்டில் உள்ளது.

உலகில் இயற்கையாக சோடியம் நைட்ரேட் கிடைக்குமிடமாக தென் அமெரிக்கா உள்ளது.

தென்அமெரிக்காவின் மெஸ்டிஜோ பூர்வகுடிகள் மற்றும் ஐரோப்பிய கலப்பினம் ஆகும். முலாடோ ஐரோப்பிய மற்றும் கருப்பின கலப்பினம் ஆகும். ஸாம்போ பூர்வகுடிகள் மற்றும் கருப்பின கலப்பினம் ஆகும்.

முக்கிய வினாக்கள்

செயற்கை இழையான ரேயான் மரக்கூழிலிருந்து கிடைக்கும் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

            1) செல்லுலோஸ்.                           2) ரப்பர்.

            3) தண்ணீர்.                                       4) பசை.

விடை : செல்லுலோஸ்.

ராக்கி மலைத்தொடரும் கடற்கரை மலைத்தொடரும் எவ்வாறு அழைக்கப்படுகிறது.

            1) லாப்ரடார்.                                               2) லாரன்ஷியன்.

            3) அப்பலேஷியன்.                         4) மேற்கத்திய கார்டில்லெராஸ்.

விடை : மேற்கத்திய கார்டில்லெராஸ்.

பெரிய சேற்று ஆறு என அழைக்கப்படுவது எது?

            1) அமேசான்.                                                2) கொலராடோ.                

            3) மிசிசிப்பி.                                     4) யூகான்.

விடை : மிசிசிப்பி.

உலகின் மிக நீண்ட மலைத்தொடர் எது?

            1) இமயமலை.                                 2) ஆண்டிஸ்.

            3) ராக்கி.                                            4) ஆல்ப்ஸ்.

விடை : ஆண்டிஸ்.

*****

No comments:

Post a Comment