தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.
National Means Cum Merit Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன் (SAT).
சமூக அறிவியல்.
ஏழாம் வகுப்பு – குடிமையியல்.
சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு.
பழங்கால முறைப்படி சந்தை என்பது வாங்குபவர்கள் மற்றும்
விற்பவர்கள் தங்கள் பொருள்கள் மற்றும் சேவைகளைப் பரிமாறிக் கொள்ளும் இடமாகும்.
பொருளாதாரத்தில் சந்தை என்பது இயற்கை இடம் சார்ந்ததாகக்
கூறப்படவில்லை.
பொருளாதார வல்லுநர்கள் சந்தையை வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்கள்
ஒன்றாக வருவதாக விவரிக்கின்றனர்.
பொருள்கள், சேவைகள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்
இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அமைப்பு சந்தை ஆகும்.
பணப் பரிவர்த்தனையில் ஈடுபடுகின்ற இரு தரப்பினரும் விற்பனையாளர்
மற்றும் வாங்குபவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
விற்பனையாளர் பணம் மற்றும் பரிமாற்றங்களை வாங்குபவருக்கு
விற்கிறார்.
சந்தையானது போட்டித்
தன்மையுடன் இருக்க ஒன்றுக்கும் மேற்பட்ட வாங்குபவர் மற்றும் விற்பவர் இருக்க வேண்டும்.
பொருளாதாரத்தில் சந்தை என்பது பண்டத்திற்கான கடைகளையும்
பொருள்களின் தொகுப்பையும் குறிக்கிறது.
சந்தை இயற்பியல் சார்ந்த அல்லது புவியியல் சார்ந்த இருப்பிடத்தைக்
குறிப்பதாயில்லை.
சந்தை ஒரு பொதுவான பரந்த பகுதியாகவும் பிராந்தியத்தின்
தேவையையும் அளிப்பையும் விநியோகிக்கும் சக்திகளைக் கொண்டதாகவும் உள்ளது.
பரவலாகச் சந்தையானது தயாரிப்புச் சந்தை, காரணிச் சந்தை
என இரண்டு வகைப்படுத்தப்படுகிறது.
நிலம், மூலதனம், உழைப்பு போன்ற உற்பத்திக் காரணிகளை வாங்குவதற்கும்
விற்பதற்குமான சந்தையானது காரணிச் சந்தையாகும்.
புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையில் சந்தையானது, 1.
உள்ளூர் சந்தை, 2. பிராந்திய சந்தை, 3. தேசிய சந்தை, 4. சர்வதேச சந்தை என வகைப்படுத்தப்படுகிறது.
நேரத்தின் அடிப்படையில் சந்தையானது, 1. மிக குறுகிய கால
சந்தை (பூக்கள், காய்கறிகள், கனிகள்), 2. குறுகிய கால சந்தை, 3. நீண்ட கால சந்தை என
வகைப்படுத்தப்படுகிறது.
பரிவர்த்தனை அடிப்படையில் சந்தையானது, 1. உடனடிச் சந்தை,
2. எதிர்கால சந்தை (கடன் மற்றும் வாக்குறுதி அடிப்படையில்) என வகைப்படுத்தப்படுகிறது.
ஒழுங்குமுறை அடிப்படையில் சந்தையானது, 1. ஒழுங்குபடுத்தப்பட்ட
சந்தை (எடுத்துக்காட்டு : பங்குச் சந்தை),
2. கட்டுப்பாடற்ற சந்தை என வகைப்படுத்தப்படுகிறது.
போட்டியின் தன்மையின் அடிப்படையில் சந்தையானது, 1. முற்றுரிமை,
2. ஏகபோக போட்டி, 3. ஒலிகோபோலி என வகைப்படுத்தப்படுகிறது.
ஏகபோக போட்டி என்ற சொல்லானது 1933 இல் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின்
பேராசிரியர் எட்வர்ட் எச் சேம்பர்லின் என்பவரால் ‘ஏகபோக போட்டியின் கோட்பாடு’ என்ற
நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஒலிகோபோலி’ என்ற சொல்லானது சில எனப் பொருள்படும் ‘ஒலிகோய்’,
கட்டுப்பாடு எனப் பொருள்படும் ‘பாலி’ எனும் இரு கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டது.
ஒலிகோபோலி என்பது ஒரே மாதிரியான அல்லது வேறுபட்ட தயாரிப்புகளில்
சில விற்பனையாளர்கள் உள்ளதைக் குறிக்கிறது.
நுகர்வோர் என்போர் பணம் செலுத்தியவர், வாக்குறுதி பெற்றவர்,
ஓரளவு பணம் செலுத்தியவர் மற்றும் ஓரளவு வாக்குறுதி பெற்றவர் ஆவர்.
பொருளையோ, சேவையையோ இலவசமாகப் பெறும் போது, வணிக நோக்கத்திற்காக
ஒரு சேவையை அமர்த்தும் போது அல்லது வாங்கும் போது, ஒப்பந்த அடிப்படையில் ஒரு சேவையைப்
பெறும் போது ஒருவர் நுகர்வோராய் இருக்க இயலாது.
விற்பனை செய்யப்பட்ட பொருள் திரும்பப் பெறப்பட மாட்டாது
அல்லது பொருட்களை மாற்ற இயலாது அல்லது எந்தச் சூழலிலும் பணம் திருப்பித் தரப்பட மாட்டாது
என்பன போன்றவை முறையற்ற வணிக நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைக்கு ஏற்றதல்ல.
நியாயமற்ற வர்த்தக நடைமுறை என்பது நியாயமற்ற அல்லது ஏமாற்றும்
நடைமுறையைப் பின்பற்றுவது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் என்பன நுகர்வோரின் உரிமைகளைப்
பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட அரசாங்க வழிமுறைகளின் வடிவங்களாகும்.
தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (TRAI), ஆயுள் காப்பீட்டு
ஒழுங்கு முறை மற்றும் இந்தியாவின் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) ஆகியவை நுகர்வோர் பாதுகாப்பு
அமைப்புகளாகும்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 இல் இயற்றப்பட்டு
1986 டிசம்பர் 24 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நுகர்வோரின் எட்டு அடிப்படை உரிமைகளாவன, 1. அடிப்படைத்
தேவைகளுக்கான உரிமை, 2. பாதுகாப்புக்கான உரிமை, 3. தகவல் அறியும் உரிமை, 4. தேர்ந்தெடுக்கும்
உரிமை, 5. பிரதிநிதித்துவ உரிமை, 6. குறை தீர்க்கும் உரிமை, 7. நுகர்வோர் கல்வி மற்றும்
உரிமை, 8. தூய்மையான சுற்றுப்புறச் சூழலைப் பெறுவதற்கான உரிமை.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ‘நுகர்வோருக்கான மகா சாசனம்’
என்று அழைக்கப்படுகிறது.
தேசிய நுகர்வோர் ஆணையம் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான மதிப்புமிக்க
அளவிலான குறைகளைத் தீர்க்கும் மத்திய நுகர்வோர் நீதிமன்றம் ஆகும்.
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஒரு கோடி ரூபாய்க்கும்
குறைவான மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளை மாநில அளவிலான தீர்க்கும் நீதிமன்றமாகும்.
மாவட்ட குறைதீர் மன்றம் 20 லட்ச ரூபாய் மதிப்புமிக்க அளவிலான
குறைகளைத் தீர்க்கும் மாவட்ட நீதிமன்றமாகும்.
புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ஆகஸ்ட் 2019 இல் நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது. இது நுகர்வோர் பாதுகாப்பில் ஒரு மைல்கல் ஆகும்.
புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் சிறப்பம்சங்களாவன,
1. இ – வணிக பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கியிருத்தல், 2. பணவியல் அதிகார வரம்பை மேம்படுத்துதல்,
3. புகார்களை இ – தாக்கல் செய்தல், 4. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரத்தை நிறுவுதல்,
5. நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைப் பகிர்தல், 6. தவறான விளம்பரத்திற்கு அபராதம் விதித்தல்.
புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் படி மாவட்ட நுகர்வோர்
நீதிமன்றம் ஒரு கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் சேவை மதிப்பு அளவிலான புகார்களை
விசாரிக்கலாம். அதற்கு மேல் மதிப்புள்ளவற்றை தேசிய நுகர்வோர் ஆணையம் விசாரிக்கும்.
காணொளி Video Conferencing மூலம் விசாரிப்பதற்கான வாய்ப்புகளை
புதிய நுகர்வோர் சட்டம் வழங்குகிறது.
புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி தவறான விளம்பரத்திற்கு
பத்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கலாம்.
அடுத்தடுத்த குற்றத்திற்கு ஐம்பது லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை
தண்டனை விதிக்கலாம். அடுத்தடுத்த குற்றத்திற்குத் தடைக்காலம் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கப்படலாம்.
தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் (NCDRC) 1988 இல் அமைக்கப்பட்டது.
இதன் தலைமையகம் புது டெல்லி. இது உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் செயல்படுகிறது.
மாநில நுகர்வோர் குறைதீர் மன்றம் (SCDRF) 20 லட்ச ரூபாய்க்கு
மேல் மதிப்புள்ள வழக்குகளைக் கையாள்கிறது.
மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் (DCDRF) 20 லட்ச ரூபாய்
வரையிலான மதிப்புள்ள வழக்குகளை விசாரிக்கிறது.
நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சில முக்கிய சட்டங்களாவன,
1.
சட்ட அளவீட்டுச் சட்டம் 2009,
2.
இந்திய தர நிர்ணய பணியகம் 1986,
3.
அத்தியாவசிய பொருள்கள் சட்டம் 1955,
4.
கருப்புச் சந்தைத் தடுப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பராமரிப்புச் சட்டம்
1980.
முக்கிய வினாக்கள்
‘ஏகபோக போட்டியின் கோட்பாடு’ எனும் நூலின் ஆசிரியர் யார்?
1) ரகுராம்
ராஜன். 2) அமர்த்தியா சென்.
3) சேம்பர்லின். 4) ஜெயரஞ்சன்.
விடை
: சேம்பர்லின்.
பூக்கள், காய்கறிகள், கனிகள் சார்ந்த சந்தை எவ்வகையிலானவை?
1) குறுகிய
கால சந்தை. 2) மிக குறுகிய
கால சந்தை.
3) நீண்ட
கால சந்தை. 4) இவற்றில்
எதுவுமில்லை.
விடை
: மிக குறுகிய கால சந்தை.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு எது?
1)
1986. 2)
1990.
3)
1992. 4)
1995.
விடை
: 1986.
புதிய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
ஆண்டு எது?
1)
2011. 2)
2015.
3)
2017. 4)
2019.
விடை
: 2019.
*****
No comments:
Post a Comment