தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.
National Means Cum Merit Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன் (SAT).
சமூக அறிவியல்.
ஏழாம் வகுப்பு – குடிமையியல்.
சாலைப் பாதுகாப்பு.
சக்கரம் புரட்சிகர கண்டுபிடிப்பாகும். இக்கண்டுபிடிப்பானது
வரலாற்றில் மனிதரின் அறிவுத் திறமையை நிரூபிக்கிறது.
உலகளவில் அதிக அளவு சாலை விபத்துகள் அதாவது 10 சதவீதம்
இந்தியாவில் நடக்கின்றன.
சாலை விபத்திற்கான காரணங்களாவன, 1. கவனச் சிதறல், 2. கட்டுப்பாடு
இல்லாமல் வாகனங்களை இயக்குதல், 3. இரவில் வாகனங்களை இயக்குதல், 4. வாகனங்களிடையே இடைவெளி
இல்லாதிருத்தல், 5. போக்குவரத்து நெரிசல், 6. சாலையின் நிலை, 7. பாதுகாப்புக் கவசங்களைத்
தவிர்த்தல், 8. பாதசாரிகளின் பொறுமையின்மை, 9. இதர காரணங்கள்.
சாலைப் பாதுகாப்பிற்கான 10 முக்கிய விதிகளாவன, 1. நில்
அல்லது மெதுவாகச் செல், 2. இருக்கையின் வார்ப்பட்டையை அணிதல், 3. போக்குவரத்து விதிமுறைகளையும்
சைகைகளையும் பின்பற்றுதல், 4. வேகத்தடைகளை மதித்தல், 5. வாகனத்தை முறையாகப் பராமரித்தல்,
6. வாகனம் இயக்கும் போது கைப்பேசியை எப்போதும் பயன்படுத்தாமல் இருத்தல், 7. தலைக்கவசம்
அணிதல், 8. வாகனத்தை வேகமாக இயக்காது இருத்தல், 9. மற்றவர்கள் மீது அக்கறை கொள்ளுதல்,
10. கவனக்குறைவால் அல்லது கவனச் சிதறலால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்த்தல்.
இருக்கையின் வார்ப்பட்டையினால் 60 சதவீதம் காரோட்டிகளின்
விபத்துகளில் மாற்றம் நிகழ்கிறது.
வசிப்பிடங்களில் சரியான வேகம் மணிக்கு 20 கிலோ மீட்டர்.
வேகத்தின் அளவு மணிக்கு 30 கிலோ மீட்டர்.
தலைக்கவசம் அணிவதால் 70 சதவீதம் கடுமையான காயங்கள் தவிர்க்கப்படுகின்றன.
இந்திய சட்டப்படி வாகன ஓட்டுநர் உரிமம் பெறும் வயது
18.
சாலைப் போக்குவரத்துச் சட்டம் பாராளுமன்றத்தால் 1988 இல்
இயற்றப்பட்டு 1989 இல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாலை
விபத்துகளைக் குறைப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
வாகனம் இயக்குபவர்கள் வாகனத்தின் பதிவுச் சான்றிதழ், காப்பீட்டுச்
சான்றிதழ், வாகனவரி கட்டியதற்கான சான்றிதழ், அனுமதி மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவற்றை
வைத்திருக்க வேண்டும்.
ஒரே பகுதியிலிருந்தோ அல்லது ஒரே வழித்தடத்திலோ தினந்தோறும்
மகிழுந்து அல்லது இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதே தடத்தில் செல்பவர்களை உடன்
அழைத்துச் செல்வதே கார் பூலிங் ஆகும்.
கார் பூலிங்கால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைகிறது,
போக்குவரத்து நெரிசல் குறைகிறது, காற்று மாசுபாடும் குறைகிறது.
ரக்சா பாதுகாப்பு வாகன இயக்கக் கருவி ஒரு தானியங்கி கருவி.
இது வாகனம் எங்குள்ளது, வாகனத்தின் இயந்திர கண்காணிப்பு, வாகனத்தின் பதட்ட நிலை ஆகியவற்றை
உடனடியாக வெளிப்படுத்த பொருத்தப்படுகிறது.
ரக்சா பாதுகாப்பு வாகன இயக்கக் கருவியானது மேடு, பள்ளங்கள்,
மோசமான நிலையில் உள்ள சாலைகள், வேகத்தை மீறுதல் குறித்த எச்சரிக்கைகளை ஓட்டுநருக்கு
வழங்குகிறது.
பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகப் போக்குவரத்துக்
கல்வி இணைக்கப்பட வேண்டும்.
சச்சின் டெண்டுல்கரின் 45 வது பிறந்த நாளை ஒட்டி தலைக்கவசம்
அணிதலின் முக்கியத்துவம் குறித்த காணொளியை மும்பை காவல் துறை வெளியிட்டது.
போக்குவரத்துக் குறியீடுகள் போக்குவரத்தை நடத்தும் சத்தமில்லா
நடத்துநராகச் செயல்படுகின்றன.
நில், வேகத்தடை, வலப்புறம் திரும்பு, இடப்புறம் திரும்பாதே
என்பன கட்டாயக் குறியீடுகள்.
ஓட்டுநருக்கு எச்சரிக்கை தருபவை எச்சரிக்கைக் குறியீடுகள்.
மருத்துவமனை, பெட்ரோல் பங்க், இளைப்பாறும் இடம், வாகனம்
நிறுத்துமிடம், நிறுத்தக்கூடாத இடம் என்பன தகவல் குறியீடுகள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் சாலைப் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.
சாலை விபத்துகள் ஒரு நாட்டின் முன்னேற்றத்தையும் பொருளாதாரத்தையும்
பாதிக்கும்.
சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத வாகனங்களைப் பயன்படுத்த
வேண்டும்.
முக்கிய வினாக்கள்
இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு வாரம் முதன்முதலாகக் கொண்டாடப்பட்ட ஆண்டு
எது?
1)
1947. 2)
1990.
3)
1989. 4)
2019.
விடை
: 1989.
போக்குவரத்தில் மனிதனின் பயனுள்ள கண்டுபிடிப்பு எது?
1) சாலை. 2) சக்கரம்.
3) வாகனம். 4) வேகத்தடை.
விடை
: சக்கரம்.
ரக்சா பாதுகாப்பு யாருக்கானது?
1) பாதசாரிகள். 2) பயணிகள்.
3) கார்
இயக்குபவர்கள். 4) இரு சக்கர வாகன ஓட்டிகள்.
விடை
: கார் இயக்குபவர்கள்.
குறுகிய வளைவுக் குறியீடு என்பது எவ்வகைக் குறியீடு?
1) கட்டாயக்
குறியீடு. 2) எச்சரிக்கைக்
குறியீடு.
3) தகவல்
குறியீடு. 4) போக்குவரத்து விளக்கு.
விடை
: எச்சரிக்கைக் குறியீடு.
*****
No comments:
Post a Comment