தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.
National Means Cum Merit Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன் (SAT).
சமூக அறிவியல்.
ஏழாம் வகுப்பு – புவியியல்.
சுற்றுலா.
சுற்றுலாப் பயணி என்ற சொல் டூரியன் என்ற பழமையான ஆங்கிலச்
சொல்லிலிருந்து தோன்றியது.
சுற்றுலாவின் மூன்று முக்கியக் கூறுகளாவன, 1. ஈர்ப்புத்
தலங்கள், 2. எளிதில் அணுகும் தன்மை, 3. சேவை வசதிகள்.
ஈர்ப்புத் தலங்கள் இயற்கை ஈர்ப்புத் தலங்கள், கலாச்சார
ஈர்ப்புத் தலங்கள் என இரு வகைப்படும்.
சுற்றுலாவின் வகைகளாவன, 1. சமயச் சுற்றுலா, 2. கலாச்சாரச்
சுற்றுலா, 3. வரலாற்றுச் சுற்றுலா, 4. சூழல் சுற்றுலா, 5. சாகசச் சுற்றுலா, 6. பொழுதுபோக்குச்
சுற்றுலா.
இந்துக்கள் காசிக்கும், கிறித்தவர்கள் ஜெருசலத்திற்கும்,
இசுலாமியர்கள் மெக்காவுக்கும் செல்வது சமயச் சுற்றுலா ஆகும்.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், இராமேஸ்வரம், உத்திரப் பிரதேசத்தின்
வாரணாசி (காசி), சாரநாத், காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோவில், லடாக் புத்த மடங்கள், கோவாவின்
செயின்ட் பிரான்சிஸ் சேவியர் தேவாலயம், பஞ்சாப்பின் அமிர்தசரஸ் ஆகியன சமயச் சுற்றுலா
தலங்கள் ஆகும்.
கலாச்சாரச் சுற்றுலாவின் அம்சத்தைக் குறிப்பது காஸ்ட்ரோனமி
ஆகும்.
கம்போடியாவின் அங்கோர்வாட், இந்தியாவின் தாஜ்மஹால், எகிப்தின்
பிரமிடுகள் ஆகியன வரலாற்றுச் சுற்றுலா தலங்கள் ஆகும்.
அமேசான் மழைக்காடுகள், ஆப்பிரிக்க வனங்கள் ஆகியவற்றுக்குச்
செல்வது சூழல் சுற்றுலா ஆகும்.
ஆஸ்திரேலியாவின் விண்வீழ் விளையாட்டு, நியூசிலாந்தின் மலை
உச்சிவீழ் இழுவை விளையாட்டு, பிரம்மபுத்திரா நதியின் கட்டுமர மிதவைப் பயணம், இமயமலைச்
சிகரங்களில் மலையேற்றம் போன்றவற்றிற்குச் செல்வது சாகசச் சுற்றுலா.
சொந்த நாட்டிற்குள் செல்லும் சுற்றுலா உள் வரும் சுற்றுலா
எனவும், வெளிநாடுகளுக்குச் செல்லும் சுற்றுலா வெளிச் செல்லும் சுற்றுலா எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தியத் துணைக்கண்டமானது ஏழு முக்கிய மலைத் தொடர்களைக்
கொண்டுள்ளது.
தமிழ்நாட்டின் கொடைக்கானல், ஊட்டி, உத்திரகாண்டின் நைனிடால்,
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங், காஷ்மீரின் ஸ்ரீநகர், மேகாலயாவின் சில்லாங், இமாச்சலப்
பிரதேசத்தின் சிம்லா, கேரளாவின் மூணாறு, சிக்கிமின் காங்டாங் ஆகியன முக்கிய மலைவாழிடங்கள்.
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தாழையார்
நீர்வீழ்ச்சி குதிரை வால் போன்று அமைந்துள்ளது.
கர்நாடகத்தின் ஷிமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி
ஜோக் நீர்வீழ்ச்சி.
மேகலாயாவின் கிழக்கு காசி மாவட்டத்தில் நோகாளிகாய் நீர்வீழ்ச்சி
அமைந்துள்ளது.
ஆந்திராவின் தலக்கோணம் நீர்வீழ்ச்சி மூலிகைக் குணங்கள்
கொண்டது.
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி
இந்தியாவின் நயாகரா எனப்படுகிறது.
சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுப்பது சேவை வசதிகள், வெளியேற்றுவது
கௌரவம்.
தமிழ்நாட்டின் முதுமலை சரணாலயத்தில் புலி, யானை, மான்,
காட்டெருமை ஆகியன உள்ளன.
அசாம் காசிரங்கா தேசியப் பூங்காவில் காண்டாமிருகங்கள் உள்ளன.
இராஜஸ்தானின் ராந்தம்பூர் தேசியப் பூங்காவில் புலிகள் உள்ளன.
மத்தியப் பிரதேசம் கான்கா தேசியப் பூங்காவில் சதுப்பு நில
மான்கள் உள்ளன.
மேற்கு வங்கம் சுந்தரவன தேசியப் பூங்காவில் வங்காளப் புலிகள்
உள்ளன.
குஜராத் கிர் தேசியப் பூங்காவில் சிங்கங்கள் உள்ளன.
கர்நாடகத்தின் பத்ரா சரணாலயத்தில் காட்டெருமை, சிறுத்தை,
காட்டெருது ஆகியன உள்ளன.
கேரளா பெரியார் தேசியப் பூங்காவில் யானை, மான் ஆகியன உள்ளன.
உத்திரகான்ட் கார்பெட் தேசியப் பூங்காவில் புலிகள் உள்ளன.
தமிழ்நாட்டில் கூந்தன்குளம், கேரளாவின் குமரகம், இராஜஸ்தானின்
பரத்பூர், மகாராஷ்டிராவின் மயானி, ஆந்திராவின் உப்பளப்பாடு, குஜராத்தின் நல்சரோவர்,
உத்திரப்பிரதேசத்தின் நவாப்கஞ்ச் ஆகியன பறவைகள் சரணாலயங்கள்.
இந்தியாவின் கடற்கரையின் நீளம் 7517 கிலோ மீட்டர்.
கோவாவின் கலங்கட், அகூதா கடற்கரைகள் நீர் விளையாட்டுக்குப்
புகழ் பெற்றவை.
தனுஷ்கோடியில் கடல்நீர் நீல ரத்தின நிறத்தில் காணப்படுகிறது.
கேரளாவின் வற்கலை கடற்கரை சூரியன் மறையும் காட்சியைக் காண
ஏதுவான ஓங்கல் பாறை கொண்டது.
கர்நாடகாவின் ஓம் கடற்கரை இரு அரைவட்டக் குகைகள் இணைந்து
ஓம் வடிவத்தைக் காட்டுகின்றது.
கேரளாவின் மராரி கடற்கரை தொட்டில் போன்று உள்ளது.
தமிழ்நாட்டில் 33000 பழங்காலக் கோவில்கள் உள்ளன.
ஊட்டி மலைகளின் ராணி எனவும், ஏற்காடு ஏழைகளின் ஊட்டி எனவும்,
கொடைக்கானல் மலைகளின் இளவரசி எனவும், வெள்ளியங்கிரி மலை தெற்கின் கைலாஷ் எனவும், ஜவ்வாது
மலை இயற்கையின் சொர்க்கம் எனவும் அழைக்கப்படுகிறது.
ஏலகிரி 14 கொண்டை ஊசி வளைவுகளையும், கொல்லிமலை 70 கொண்டை
ஊசி வளைவுகளையும் கொண்டது.
கோத்தகிரி பச்சை மலை எனப்படுகிறது.
மேகமலை உயர்ந்த மேகங்கள் குவியும் பகுதியாகும்.
ஆனை மலை உயர் விளிம்பு எனப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியும், தேனி
மாவட்டத்தில் கும்பக்கரை நீர்வீழ்ச்சியும், கோயம்புத்தூர் ஆனைமலையில் குரங்கு நீர்வீழ்ச்சியும்,
சேர்வராயன் குன்றுகளில் கிளியூர் நீர்வீழ்ச்சியும், திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றால
நீர்வீழ்ச்சியும், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் புளியஞ்சோலை என்னுமிடத்தில் ஆகாய
கங்கையும், தேனி மாவட்டத்தில் சுருளி நீர்வீழ்ச்சி அல்லது நில நீர்வீழ்ச்சி அல்லது
மேகமலை நீர்வீழ்ச்சியும் உள்ளன.
தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130058 சதுர கிலோ மீட்டர்.
இதில் 17.6 சதவீதம் காடுகள்.
நீலகிரி மாவட்டத்தில் முதுமலை சரணாலயமும், திருநெல்வேலியில்
முண்டந்துறை, களக்காடு சரணாலயங்களும், கோயம்புத்தூரில் இந்திராகாந்தி சரணாலயமும், நாகப்பட்டினத்தில்
கோடியக்கரை சரணாலயமும் உள்ளன.
சிவகங்கையில் வேட்டங்குடி, அரியலூரில் காரைவெட்டி, ஈரோட்டில்
வெல்லோட், காஞ்சிபுரத்தில் வேடந்தாங்கல் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் கிண்டி, மன்னார் வளைகுடா, கோவை, முக்கூர்த்தி,
முதுமலை ஆகிய இடங்களில் தேசியப் பூங்காக்கள் உள்ளன.
காஞ்சிபுரத்தின் கோவளம் கடற்கரை சிறிய மீன்பிடி கிராமம்.
மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது மிக நீண்ட கடற்கரை.
கன்னியாகுமரி கடற்கரை பல வண்ண மணல்களைக் கொண்டது.
இராமேஸ்வரம் கடற்கரை அலையற்ற கடற்கரை.
காஞ்சிபுரத்தின் முட்டுக்காடு அமைதியான ஆழமற்ற கடற்கரை.
கடலூரின் சில்வர் கடற்கரை நீர் விளையாட்டுகளுக்குப் பெயர்
பெற்றது.
சென்னை எலியட் கடற்கரை இரவும் பகலும் மனிதர்கள் நிறைந்து
காணப்படும் கடற்கரை.
மகாபலிபுரம் கடற்கரை தொல்பொருள்கள் மற்றும் கட்டடக் கலை
நிறைந்த கடற்கரை.
NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
சூழல் சுற்றுலாவுடன் தொடர்புடையது எது?
1) ஜெருசலம்.
2) அங்கோர்வாட்.
3) பிரம்மபுத்திரா
கட்டுமர மிதவை நதி பயணம்.
4) அமேசான்
மழைக்காடுகள்.
விடை
: அமேசான் மழைக்காடுகள்.
IATA என்பதன் விரிவாக்கம் என்ன?
1)
International Aviation Travel Association.
2)
International Air Transport Association.
3)
International Aviation and Tourism Association.
4)
International Air Travel Agency.
விடை
: International Air Transport Association.
முக்கிய வினாக்கள்
இந்தியாவில் சுற்றுலாத் தலங்களில் அதிக வருமானம் தரும் மாநிலம் எது?
1) கேரளா. 2) தமிழ்நாடு.
3) குஜராத். 4) கர்நாடகம்.
விடை
: தமிழ்நாடு.
இந்தியாவின் நயாகரா என அழைக்கப்படும் நீர்வீழ்ச்சி எது?
1) தலக்கோணம். 2) அதிரப்பள்ளி.
3) ஜோக். 4) தாழையார்.
விடை
: அதிரப்பள்ளி.
இந்தியாவின் கடற்கரையின் நீளம் எத்தனை கிலோ மீட்டர்?
1)
7157. 2)
7715.
3)
7175. 4)
7517.
விடை
: 7517.
தமிழக நிலப்பகுதியில் எத்தனை சதவீதம் காடுகள் உள்ளன?
1)
17.6 சதவீதம். 2)
18.6 சதவீதம்.
3)
16.7 சதவீதம். 4)
71.6 சதவீதம்.
விடை
: 17.6 சதவீதம்.
*****
No comments:
Post a Comment