தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.
National Means Cum Merit Scholarship Scheme.
NMMS.
படிப்பறிவுத் திறன் (SAT).
சமூக அறிவியல்.
ஏழாம் வகுப்பு – குடிமையியல்.
1. சமத்துவம்.
இயற்கையான சமத்துவமின்மையைச் சரி செய்ய இயலாது. செயற்கையான
சமத்துவமின்மையைச் சரி செய்ய இயலும்.
சமத்துவம் என்பது சமமாக நடத்துவதில் மட்டும் இல்லை, வெகுமதி
அளிப்பதிலும் இருக்கிறது என்கிறார் லாஸ்கி.
சமூக சமத்துவம், குடிமைச் சமத்துவம், அரசியல் சமத்துவம்,
பாலின சமத்துவம் ஆகியன சமத்துவத்தின் வகைகளாகும்.
இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த எவரும் வாக்களிக்கலாம்.
25 வயது பூர்த்தியடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம்.
இந்தியாவில் 1952 இல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலிலேயே
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் சுவிட்சர்லாந்தில் 1971 இல்தான் பெண்களுக்கு
வாக்குரிமை வழங்கப்பட்டது.
ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், தயானந்த
சரஸ்வதி, மகாதேவ் கோவிந்த ரானடே, தாராபாய் ஷிண்டே, பேகம் ருகேயா சகாவத் உசேன், சாவித்திரிபாய்
புலே ஆகியோர் பெண்களின் சமத்துவத்திற்காகப் போராடியவர்கள்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு
வழங்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 14 முதல் 18 மூலம்
சமத்துவத்தை அளிக்கிறது.
14 வது சட்டப்பிரிவு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது.
15வது சட்டப்பிரிவு பாகுபாட்டைத் தடை செய்கிறது.
16வது சட்டப்பிரிவு பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம
வாய்ப்பு அளிக்கிறது.
17வது சட்டப்பிரிவு தீண்டாமையை ஒழிக்கிறது.
18வது சட்டப்பிரிவு பட்டங்கள் அளித்து வேறுபடுத்துதலைத்
தடை செய்கிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சட்டப்படி சமமான
பாதுகாப்பு என்பதை சட்டப்பிரிவு 21 வலிமையாக எடுத்துச் சொல்கிறது.
NMMS தேர்வில் கேட்கப்பட்ட வினா
பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
1) பிரிவு
14. 2) பிரிவு 16.
3) பிரிவு
28. 4) பிரிவு 18.
விடை
: பிரிவு 28.
விடைக்குறிப்பு
: பிரிவு 14, 16, 18 ஆகியன சமத்துவம் தொடர்பானவை.
முக்கிய வினாக்கள்
1. உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடு எது?
1) இந்தியா.
2) இலங்கை.
3) வங்கதேசம். 4)
பாகிஸ்தான்.
விடை
: இந்தியா.
2. தீண்டாமையை ஒழிக்கும் சட்டப்பிரிவு எது?
1)
14. 2) 15. 3)
16. 4) 17.
விடை
: 17.
3. 2017 இல் நிலையான மேம்பாட்டிற்கான குறிக்கோள்களில் பாலின சமத்துவம் எத்தனையாவது
குறிக்கோளாகக் குறிப்பிடப்படுகிறது?
1)
5. 2) 17. 3)
20. 4) 7.
விடை
: 5.
4. தேர்தலில் போட்டியிட எத்தனை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்?
1)
18. 2) 25. 3)
20. 4) 30.
விடை
: 25.
*****
No comments:
Post a Comment