Sunday, 29 November 2026

NMMS - தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

சமூக அறிவியல்.

ஏழாம் வகுப்பு – வரலாறு.

தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்.

பிகநிதயா எனும் பௌத்த நூல் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் 62 தத்துவ, சமயப் பள்ளிகள் இருந்ததாகக் கூறுகிறது.

மகாவீரர் இயற்கை எய்தி 200 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கருத்துகளைத் தொகுக்க பாடலிபுத்திரத்தில் சமண அறிஞர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் வெற்றி பெறவில்லை.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வல்லபியில் கூட்டப்பட்ட சமண சமயக் கூட்டம் மகாவீரரின் கருத்துகளைத் தொகுப்பதில் வெற்றி பெற்றது.

கி.பி. 500 இல் சமண ஆச்சாரியார்கள் சமண இலக்கியங்களை ஆவணப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்தனர்.

சமணத்தின் ஐம்பெரும் உறுதிமொழிகளாவன, 1. அகிம்சை, 2. உண்மை, 3. திருடாமை, 4. பிரம்மச்சரியம், 5. ஆசை கொள்ளாமை.

கி.பி. முதலாம் நூற்றாண்டில் சமணர்கள் திகம்பரர், சுவேதம்பரர் என இருபெரும் பிரிவுகளாகப் பிரிந்தனர்.

சமண இலக்கியங்கள் ஆகம சூத்திரங்கள், ஆகமங்கள் அல்லாத இலக்கியங்கள் என இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.

ஆகம சூத்திரங்கள் அர்த்த – மகதி பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. 12 நூல்களைக் கொண்ட அவை மகாவீரரின் போதனைகளைக் கொண்டுள்ளன. 12வது ஆகம சூத்திரம் தொலைந்து போனதாகக் கருதப்படுகிறது.

ஆகமங்கள் இல்லாத இலக்கியங்கள் ஆகமங்கள் மேல் எழுதப்பட்டவை. பல மொழிகளில் எழுதப்பட்ட 84 நூல்கள் அவற்றுள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 41 சூத்திரங்கள், 12 உரைகள், மகா பாஷ்யா ஆகியன இடம் பெற்றுள்ளன.

41 சூத்திரங்கள் என்பன 11 அங்கங்களையும், 12 உப அங்கங்களையும், 5 சேடாக்களையும் (துறவிகளுக்கான நடத்தை விதிகள்), 5 மூலங்களையும், பத்ரபாகுவின் கல்பசூத்ரா போன்ற 8 வகை நூல்களையும் கொண்டுள்ளன.

பஞ்ச தந்திரத்தில் சமணத்தின் தாக்கம் இருப்பதாக நம்பப்படுகிறது.

கல்பசூத்திராவின் ஜைனசரிதா சமண தீர்த்தங்கரர்களின் வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கமாகக் கொண்டது.

சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர் பார்சவநாதர். இவரே சமண சமயத்தின் நிறுவனர். 24வது தீர்த்தங்கரர் மகாவீரர்.

கல்பசூத்ராவின் ஆசிரியர் பத்ரபாகு சந்திரகுப்த மௌரியரோடு மைசூருக்குப் புலம் பெயர்ந்து குடியமர்ந்தார்.

நிர்வாண நிலையை அடைந்து இவ்வுலகிற்கும் அடுத்த உலகிற்கும் இடையே பாதை அமைப்போரே தீர்த்தங்கரர்.

திருத்தக்கத் தேவரால் இயற்றப்பட்ட சீவக சிந்தாமணி சமண இலக்கியமாகும். நாலடியார் சமண முனிவர்களால் இயற்றப்பட்டது. திருவள்ளுவரும் சமணர் என நம்பப்படுகிறது.

சமணர்கள் கர்நாடகாவிலிருந்து கொங்குப் பகுதி, காவேரி கழிமுகப்பகுதி, பாண்டிய நாடு ஆகியவற்றுக்கு இடம் பெயர்ந்தனர். இவர்கள் திகம்பரர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

களப்பிரர்கள் சமண சமயத்திற்கு ஆதரவாக இருந்ததாக நம்பப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சித்தன்னவாசல் குகையில் ஏழடிப்பட்டம் எனும் இயற்கைக் குகையும், குடைவரைக்  கோயிலும் உள்ளன. குகையின் பின்னே 17 சமணப் படுக்கைகள் உள்ளன. இவ்விடத்தே இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் – பிராமி கல்வெட்டும், எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளும் உள்ளன.

அறிவர் கோவில் சித்தன்னவாசல் குகைக் கோவில் குன்றின் மேற்கே அமைந்துள்ளது.

சித்தன்னவாசல் ஓவியங்கள் அஜந்தா ஓவியங்களுடன் ஒப்புமையைக் கொண்டுள்ளன.

சித்தன்னவாசல் மண்டப இடப்புறச் சுவரில் தீர்த்தங்கரர்களின் புடைப்புச் சிற்பங்களும், வலப்புறச் சுவரில் ஆச்சார்யார்களின் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன.

பல்லவர்கள் காலத்தில் சமணம் செழித்தது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்துக்கு வருகை தந்த சீனப்பயணி யுவான்சுவாங் சமணர்கள், பௌத்தர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்.

பெரும்பாலான பல்லவ மன்னர்கள் சமணர்கள்.

பல்லவ மன்னரான மகேந்திரவர்மன் தொடக்கத்தில் சமணராக இருந்தார்.

காஞ்சியில் இரு சமணக் கோவில்கள் உள்ளன. 1. திருப்பருத்திக் குன்றத்தில் உள்ள திருலோக்கியநாத ஜைனசுவாமி கோவில், 2. சந்திரபிரபா கோவில். விஜயநகர ஆட்சியின் போது புஷ்பசேனாவின் சீடரான இருகப்பா, விஜயநகர அரசர் ஹரிஹரரின் அமைச்சரும் இக்கோவிலை விரிவுபடுத்தி ஓவியங்களைத் தீட்டச் செய்தனர்.

திருப்பருத்திக்குன்றத்தின் திரிலோக்கியநாத கோவிலின் கருவறையான திரிகூட பஸ்தியில் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், கழுகுமலையில் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணர் கோயில் உள்ளது. இக்கோயில் பாண்டிய அரசன் பராந்தக நெடுஞ்சடையனால் உருவாக்கப்பட்டது.

கழுகுமலை குகைக்கோவிலில் தீர்த்தங்கரர்கள், யக்சர்கள், யக்சிகள் உருவச் சிலைகள் உள்ளன.

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், லத்தேரியில் பைரவ மலையில் சமண கற்படுக்கைகள் காணப்படுகின்றன.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகர் அருகே திருமலை சமணக் கோவிலில் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணக் கோவில்கள், குகைகள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் 22வது தீர்த்தங்கரரான நேமிநாதரின் 16.5 அடி சிலையே தமிழ்நாட்டில் உள்ள உயரமான சமண சிலையாகும்.

மதுரையைச் சுற்றி 26 சமணக் குகைகள், 200 சமணப் படுக்கைகள், 60 கல்வெட்டுகள், நூற்றுக்கும் மேற்பட்ட சமணச் சிலைகள் காணப்படுகின்றன.

கீழக் குயில்குடி கிராம குடைவரை சமணக் கோவில் சிற்பங்கள்  கி.பி. 860 முதல் 900 வரை ஆட்சி புரிந்த பாண்டிய அரசன் வீரநாராயண பாண்டியன் காலத்தவை. இங்குள்ள எட்டு சிற்பங்களில் ஆதிநாதர் அல்லது ரிஷபநாதர், மகாவீரர், பார்சவநாதர், பாகுபலி சிற்பங்கள் குறிப்பிடத்தகுந்தவை.

பள்ளி என்பது சமணர்களின் கல்வி மையங்களாகும்.

சமணத்தில் பெண்களும் துறவறம் பூண அனுமதிக்கப்பட்டது.

சமண சமயம் பாகுபாடற்ற கல்வியை வழங்கியது. பெண் கல்வியை ஊக்கப்படுத்தியது.

கௌதம புத்தர் மகாவீரரின் சம காலத்தவர் ஆவார்.

புத்தர் போதி மரத்தடியில் ஞானமடைந்தார்.

புத்தரின் மார்க்கம் என்பது நடுவழி அல்லது இடைபட்ட வழிகளை அடிப்படையாகக் கொண்ட எண்வகை மார்க்கங்கள் ஆகும். அவையாவன, 1. நல்ல எண்ணங்கள், 2. நல்ல குறிக்கோள்கள், 3. நல்ல பேச்சு, 4. நல்ல நடத்தை, 5. நல்ல வாழ்க்கை, 6. நல்ல முயற்சி, 7. நல்ல அறிவு, 8. நல்ல தியானம்.

புத்தர் பிராகிருத மொழியில் போதித்தார்.

புத்தரின் நான்கு பேருண்மைகளாவன, 1. வாழ்க்கை துன்பமயமானது, 2. துயரத்திற்குக் காரணம் ஆசைகளும் வெறுப்புகளும், 3. ஆசையைத் துறந்தால் மகிழ்ச்சியை அடையலாம், 4. எண்வகை மார்க்கம் மகிழ்வையும் நிறைவையும் அடைய உதவும்.

புத்தரின் போதனைகள் கி.மு. 80 இல் பாலி மொழியில் எழுதப்பட்டன.

திரிபிடகா எனும் பௌத்தப் பொதுவிதிகள் மூன்று கூடைகள் என்றும் அழைக்கப்பட்டன. அவையாவன, 1. வினய பிடகா, 2. சுத்த பிடகா, 3. அபிதம்ம பிடகா.

வினய பிடகா துறவிகளுக்கான நெறிமுறைகளையும், சுத்த பிடகா பௌத்த கோட்பாடுகளையும், அபிதம்ம பிடகா நன்னெறிகள், தத்துவம், நுண்பொருள் கோட்பாடுகளையும் கூறுகின்றன.

ஜாதகங்கள் புத்தரின் வாழ்க்கை தொடர்பான பல்வேறு கதைகளைக் கூறுகின்றன.

‘புத்த வம்சா’ கவிதை வடிவிலான மரபு வழிக் கதையாகும். புத்தருக்கு முன்பான 24 புத்தர்களின் வாழ்க்கையை இது கூறுகிறது.

‘மிலிந்த பன்கா’ என்ற சமஸ்கிருத நூல் நாகசேனருக்கும் கிரேக்க பாக்டீரியன் அரசன் மிலிந்தாவுக்கும் நடந்த விவாதத்தைக் கூறுகிறது.

இலங்கையின் ‘மகாவம்சம்’ இலங்கை மற்றும் இந்திய அரச குலங்களைப் பற்றியும் ‘தீப வம்சம்’ புத்தர் போதனைகள் மற்றும் புத்தத்தைப் பரப்பியோர் பற்றியும் கூறுகிறது.

புத்தகோசாவால் எழுதப்பட்ட ‘விசுத்திமக்கா’ பிற்கால நூல். இவரே முதல் பௌத்த உரையாசிரியர் ஆவார்.

மகாயான பௌத்தத்தின் எழுச்சி காரணமாக சமஸ்கிருத மொழி பௌத்தத்தில் முக்கியத்துவம் பெற்றது.

அஷ்வகோஷரால் எழுதப்பட்ட ‘புத்த சரிதா’ இதிகாச பாணியிலான சமஸ்கிருத நூலாகும்.

தமிழகத்தில் பௌத்தமானது இலங்கையைச் சேர்ந்தோரால் பரப்பப்பட்டதாக நம்பப்படுகிறது. இதற்குச் சான்று மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய நாட்டில் உள்ள பஞ்ச பாண்டவ மலை.

பக்தி இயக்க காலத்தில் பௌத்தம் எதிர்ப்புக்கு உள்ளானது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் யுவான்சுவாங் தென்னிந்தியா வந்த போது பௌத்தம் சரிவுற்ற நிலையில் இருந்தது.

‘வீரசோழியம்’ புத்தமித்திரர்  எனும் பௌத்தரால் எழுதப்பட்டது.

நாகப்பட்டினத்தில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்த சிலைகள் கிடைத்துள்ளன. சேலம் மாவட்டம் தியாகனூரில் புத்த சிற்பங்கள் கிடைத்துள்ளன.

அரசியல் காரணங்களுக்காக அளிக்கப்பட்ட ஆதரவால் நாகப்பட்டினத்தில் பௌத்தம் வளர்ந்தது.

நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜயா அரசரால் கட்டப்பட்ட சூடாமணி விகாரைக்கு ராஜராஜ சோழன் ஆதரவளித்தார்.

கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை பௌத்த காப்பியமாகும்.

வஜ்ரபோதி எனும் பௌத்த துறவி தாந்திரீகச் சடங்குகளில் திறன் பெற்று விளங்கினார். பல்லவ சபையை அலங்கரித்த அவர் சீனம் சென்றார்  என நரசிம்ம பல்லவன் காலத்துச் சான்று கூறுகிறது.

பௌத்தம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த சமயம் என மகேந்திரவர்ம பல்லவனின் மத்தவிலாச பிரகாசனம் கூறுகிறது.

பௌத்த சங்கங்களும் விகாரைகளும் கல்வித் தொண்டாற்றின.

பௌத்த விகாரைகளான நாளந்தா, தட்சசீலம், விக்கிரமசீலா ஆகியன மிகச் சிறந்த கல்வி மையங்களாக விளங்கின.

‘விகாரா’ எனும் சமஸ்கிருத சொல்லுக்கு வாழ்விடம் அல்லது இல்லம் என்பது பொருள்.

விகாரைகள் பல்கலைக்கழகங்களாகவும், நூலகங்களாகவும் விளங்கின.

சீனா, திபெத் நாடுகளில் பௌத்தம் தாக்கத்தை ஏற்படுத்தியது.

காவிரிப்பூம்பட்டினத்தில் பௌத்த விகாரை இருந்தது இந்தியத் தொல்லியல் துறையால் கண்டறியப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், திருநாட்டியத்தான்குடியில் கண்டெடுக்கப்பட்ட பத்மாசன கோலத்திலுள்ள புத்தர் சிலை 1.03 மீட்டர் உயரமுடையது.

ஆசீவகர்கள் வினைப்பயன் (கர்மா), மறுபிறவி, முன்தீர்மானம் ஆகிய கோட்பாடுகளைக் கொண்டவர்களாவர்.

ஆசீவகப் பிரிவின் தலைவர் மற்கலி கோசலர். ஆசீவகர்கள் கடுமையான துறவறத்தை மேற்கொண்டனர்.

ஆறாண்டு காலம் கோசலர் மகாவீரருடன் நட்பு கொண்டிருந்து பின் பிரிந்து சென்றார்.

அசோகரும் அவரது பேரன் தசரதாவும் ஆசீவகர்களை ஆதரித்தனர்.

மௌரியர்களின் வீழ்ச்சிக்குப் பின் ஆசீவகம் வட இந்தியாவில் சரிவைச் சந்தித்தது.

ஆசீவகம் அனைத்து இடங்களிலும் அடக்குமுறையைச் சந்தித்தது.

14 ஆம் நூற்றாண்டு வரை கர்நாடகம், தமிழகத்தில் பரவியிருந்த ஆசீவகம் அதற்குப் பின் சைவம் அல்லது வைணவத்தால் ஈர்த்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

முக்கிய வினாக்கள்

சமண சமயத்தின் ஆகம சூத்திரங்கள் எம்மொழியில் எழுதப்பட்டன?

            1) அர்த்த – மகதி பிராகிருதம்.                  2) இந்தி.

            3) சமஸ்கிருதம்.                                           4) பாலி.

விடை : அர்த்த – மகதி பிராகிருதம்.

களப்பிரர்கள் எச்சமயத்திற்கு ஆதரவாக இருந்ததாக நம்பப்படுகிறது?

            1) பௌத்தம்.                                                           2) சமணம்.

            3) ஆசீவகம்.                                                 4) சைவம்.

விடை : சமணம்.

சமய சமயத்தை நிறுவியவர் யார்?

            1) மகாவீரர்.                                                  2) நேமிநாதர்.                      

            3) பார்சவநாதர்.                                           4) திரிலோக்கிய நாதர்.

விடை : பார்சவநாதர்.

ஆசீவகப் பிரிவின் தலைவர் யார்?

            1) தசரதா.                                                       2) அசோகர்.

            3) மகாவீரர்.                                                  4) மற்கலி கோசலர்.

விடை : மற்கலி கோசலர்.

*****

No comments:

Post a Comment