Sunday, 29 November 2026

தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு.

National Means Cum Merit Scholarship Scheme.

NMMS.

படிப்பறிவுத் திறன் (SAT).

சமூக அறிவியல்.

ஏழாம் வகுப்பு – வரலாறு.

தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்.

திராவிடக் கட்டடக் கலை தமிழகத்தில் பிறந்ததாகும்.

குடைவரைக் கோவில்கள் என்பதும் குகைக் கோவில்கள் என்பதும் ஒன்றே.

தமிழக கோவில் கட்டடக் கலையின் ஐந்து கட்டங்களாவன,

1)      பல்லவர் காலம் – கி.பி. 600 முதல் 850 வரை.

2)      முற்காலச் சோழர்கள் – கி.பி. 850 முதல் 1100 வரை.

3)      பிற்காலச் சோழர்கள் – கி.பி. 1100 முதல் 1350 வரை.

4)      விஜயநகர / நாயக்கர் காலம் – கி.பி. 1350 முதல் 1600 வரை.

5)      நவீன காலம் – கி.பி. 1600 க்குப் பின்னர்.

குடைவரைக் கட்டடக் கலையின் முன்னோடிகள் பல்லவர்கள்.

மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரைக் கோவில் மண்டகப்பட்டு குடைவரைக் கோவில்.

குடைவரைக் கோவிலின் முன்புறம் இரண்டு தூண்கள் கோவிலைத் தாங்கி நிற்கும்.

குடைவரைக் கோவில்கள் பின்புறத்தில் செதுக்கப்பட்ட கருவறையும் அதற்கு முன்பாக ஒரு மண்டபத்தையும் கொண்டுள்ளன.

மகாபலிபுரத்தில் 7 கோவில்கள் வெட்டி எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன.

மகாபலிபுர கோவில்களில் 2 கருவறைகள் சிவன், விஷ்ணுவுக்கு உள்ளன. துவாரபாலகர்கள் வாயிற்காப்போர் உள்ளனர்.

கி.பி. 700க்குப் பின்னர் குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை மறைந்து பெரிய கோவில் கட்டுமானங்கள் தொடங்கின.

ஏழு கோவில்கள் எனும் மகாபலிபுர கடற்கரைக் கோவில்கள் இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்டது.

காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன்).

காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவிலைக் கட்டியவர் இரண்டாம் நந்திவர்மன்.

திரௌபதி ரதம், தர்மராஜா ரதம், பீமரதம், அர்ச்சுன ரதம், நகுல சகாதேவ ரதம் என்பன பஞ்சபாண்டவ ரதங்கள். ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த ரதங்கள் தமிழ் திராவிட கட்டடக் கலை மரபுக்கு எடுத்துக்காட்டாகும்.

புடைப்புச் சிற்பமான அர்ச்சுன தவம் 100 அடி நீளமும் 45 அடி அகலமும் கொண்டது.

1984 இல் மகாபலிபுரம் உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டது.

முற்காலப் பாண்டியர்கள் பல்லவர்களின் சம காலத்தவர்கள்.

முற்காலப் பாண்டியர்கள் கருவறையில் கடவுளர்களின் சிலைகளை நிறுவினர்.

மலையடிக்குறிச்சி, ஆனைமலை, திருப்பரங்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகியன பாண்டியர்களின் குகைக் கோயில்களில் முக்கியமானவை.

பாண்டியர் கால சிவன் கோவில்களில் லிங்கங்கள் மற்றும் நந்தி தாய்ப்பாறையிலிருந்து செதுக்கப்பட்டதாகும்.

கருவறை வாயிலின் இருபுறமும் துவாரபாலகர் சிலைகள் இடம் பெறும்.

பாண்டியர் கால ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு எடுத்துக்காட்டு கழுகுமலையில் உள்ள முற்றுப்பெறாத வெட்டுவான் கோவிலாகும். இக்கோவிலின் உச்சியில் உமா மகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா சிற்பங்கள் உள்ளன.

மதுரை மீனாட்சி கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் பாண்டியர் காலத்தவை.

பாண்டியர் கால கற்சிலைகள் மதுரை, திருமலை நாயக்கர் அருங்காட்சியகத்தில் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை,சித்தன்னவாசலிலும், திருநெல்வேலி சங்கரன்கோவில் திருமலைபுரத்திலும் முற்காலப் பாண்டியர் ஓவியங்கள் உள்ளன.

சித்தன்னவாசலின் தாமரைத் தடாக ஓவியம் புகழ் பெற்றது. சித்தன்னவாசல் ஓவியங்கள் அஜந்தா ஓவியங்களுடன் ஒப்புமைகள் பெற்றுள்ளன.

கி.பி. 850 இல் விஜயாலய சோழன் காலத்தில் துவங்கி 400 ஆண்டுகள் சோழர்கள் ஆட்சி புரிந்தனர்.

திண்டிவனம், தாதாபுரம் கோவில் முற்காலச் சோழர்களின் கட்டடக் கலைக்குச் சான்றாகும்.

முற்காலச் சோழர்களின் கட்டடக் கலையானது செம்பியன் மகாதேவி பாணியாகும். இப்பாணி என்பது அதிக தேவகோஷ்டங்கள் (மாடக்குழிகள்) கொண்டவை. இப்பாணியின் மறுவடிவாக்கம் செய்யப்பட்ட கோவிலுக்கு திருப்புறம்பியம் கோவில் சான்றாகும்.

கி.பி. 1009 இல் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சாவூர் பெரிய கோவில் ராஜராஜ சோழன் காலத்தது.

தஞ்சை பெரிய கோவிலின் விமானம் 216 அடி. மனிதனால் கட்டப்பட்ட உயரமான விமானம் இதுவே. இவ்விமானம் தட்சிணமேரு எனவும் அழைக்கப்படுகிறது. விமானம் என்பது கர்ப்பகிரகத்தின் மேலுள்ள கட்டுமானம் ஆகும்.

தஞ்சை பெரிய கோவிலின் நந்தி 16 அடி நீளமும் 13 அடி அகலமும் கொண்ட ஒரே பாறையில் செதுக்கப்பட்டது.

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் உயரம் 55 மீட்டர்.

பாண்டியர்கள் எழுச்சி பெறும் வரை 250 ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக இருந்தது.

கும்பகோணம் தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் (இந்திரனின் யானை வழிபட்ட கடவுள்) கோவில் பிற்காலச் சோழர்களின் கட்டடக் கலைக்குச் சான்றாகும். இக்கோவிலைக் கட்டியவர் இரண்டாம் ராஜராஜன்.

ஐராவதீஸ்வரர் கோவிலின் மகாமண்டபம் தேர் போல காட்சி அளிக்கிறது.

காரைக்குடி பிள்ளையார்ப்பட்டி குடைவரைக் கோயில் பிற்காலப் பாண்டியர்களின் கட்டடக் கலைக்குச் சான்றாகும்.

பிள்ளையார்ப்பட்டி குகைக் கல்வெட்டில் தேசிவிநாயகம் என செதுக்கப்பட்டுள்ளது. கணபதியின் தும்பிக்கை வலதுபுறமாகத் திரும்பியுள்ளது.

விஜயநகர ஆட்சிக் காலத்தில் கோவில்களில் மண்டபங்கள் கட்டப்பட்டன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் கல்யாண மண்டபங்கள், மதுரைக் கோவில் மண்டபம் ஆகியன விஜயநகர ஆட்சிக் காலத்தவை.

விஜயநகர ஆட்சிக் காலத்தில் தெப்பக் குளங்கள், நுழைவாயிலின் நான்கு புறங்களிலும் கோபுரங்கள் அமைக்கப்பட்டன.

விஜயநகர, நாயக்கர் ஆட்சிக் காலத்தில் சிற்பங்களோடு கூடிய மாடக்குழிகள் அமைத்தல் தொடர்ந்தது. புடைப்புச் சிற்பங்கள் அமைப்பது அதிகரித்தது. 

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் 1000 கால் மண்டபம் விஜயநகர, நாயக்கர் கால மண்டபக் கட்டடக் கலைக்குச் சான்றாகும். 

திண்டுக்கல் தாடிக்கொம்பு கோவில், திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் கோவில், தஞ்சாவூர் பெரிய கோவிலிலுள்ள சுப்பிரமணிய சாமி கோவில் ஆகியன விஜயநகர, நாயக்கர் கால கலைப்படைப்புகள் ஆகும்.

விஜயநகர நாயக்கர் கால கட்டடக் கலையின் சிறப்பம்சம் இசைத்தூண்கள் ஆகும்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், மதுரை கூடல் அழகர் கோவில், திருவில்லிபுத்தூர், திருவெள்ளரை, அழகர்கோவில், திருவண்ணாமலை, திருவரங்கம் கோவில் ஓவியங்கள் விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள் ஆகும். இந்த ஓவியங்களில் ராமாயணக் காட்சிகள், அரண்மனைக் காட்சிகள் உள்ளன.

இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோவில் பிரகாரம் உலகிலேயே நீளமான கோவில் பிரகாரம் ஆகும்.

இராமநாதபுர சேதுபதிகள் இராமேஸ்வர கோவில் கட்டடக் கலைக்குப் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர்.

இராமநாத சுவாமி கோவில் மூன்று பிரகாரச் சுற்றுகளைக் கொண்டது.

வெளிப்பிரகாரம் 7 மீட்டர் உயரம் கொண்டது.

வெளிப்பிரகாரத்தின் கிழக்கு மேற்குப் பிரகாரங்கள் 120 மீட்டர் நீளம் உடையது. வடக்கு தெற்குப் பிரகாரங்கள் 195 மீட்டர் நீளமுடையது.

வெளிப்பிரகாரத்தைத் தாங்கி நிற்கும் 1200க்கும் மேற்பட்ட தூண்கள் சிறப்புடையவை.

உட்புறப் பிரகாரம் பழமையானது.

பாறைகளில் சிற்பங்களைப் படைப்பது பல்லவர் காலச் சிறப்பாகும்.

கோவில் விமானங்கள் முற்காலச் சோழர்களின் சிறப்பாகும்.

பொலிவான கோபுரங்கள் பிற்காலச் சோழர்களின் சிறப்பாகும்.

மண்டபங்கள் விஜயநகர காலத்திய சிறப்பாகும்.

பிரகாரங்கள் நவீன கால தமிழக கட்டடக் கலையின் சிறப்பாகும்.

முக்கிய வினாக்கள்

குடைவரைக் கோவில்கள் அமைக்கும் முறை மறைந்து பெரிய வடிவக் கோவில்கள் கட்டப்பட்ட காலம் எது?

            1) கி.பி. 500.                                       2) கி.பி. 600.

            3) கி.பி. 650.                                       4) கி.பி. 700.

விடை : கி.பி. 700.

தென்னிந்தியாவின் மிகப் பழமையான கட்டுமானக் கோவில் எது?

            1) வெட்டுவான் கோவில்.                        2) ஏழு கோவில்கள்.

            3) கழுகுமலைக் கோவில்.                        4) மண்டகப்பட்டு கோவில்.

விடை : ஏழு கோவில்கள் (மகாபலிபுரம்).

பாண்டிய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் எத்தனைக்கும் மேற்பட்ட குகைக் கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளன?

            1) 50.                                                   2) 100.            

            3) 25.                                                   4) 70.

விடை : 50.

அழகிய நம்பி கோயில் எங்குள்ளது?

            1) திருக்குறுங்குடி.                          2) மதுரை.

            3) கும்பகோணம்.                            4) ஸ்ரீவில்லிபுத்தூர்.

விடை : திருக்குறுங்குடி.

*****

No comments:

Post a Comment